என் மலர்
நீங்கள் தேடியது "மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்"
- காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் அருகே உள்ள தாயம்பாளையத்தில் கற்பக விநாயகர், மாகாளியம்மன், காளியம்மன், புல்லாத்தாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நான்காம் காலயாக வேள்வி நடத்தப்பட்டு 5 மணிக்கு மேல் கற்பக விநாயகர், மாகாளியம்மன் விமான கோபுர கும்பாபிஷேகமும், காலை 6 மணிக்கு மேல் காளியம்மன், புல்லாத்தாள் கோவில் விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மூல விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது
புதுக்கோட்டை
ஆவுடையார்கோயில் தாலுகா மாகாளியேந்தல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ மாகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 8 தேதி புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.அதனை
தொடர்ந்து 3 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம் காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து ஸ்ரீ பிரபு மற்றும் சுந்தரமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக்கான அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்து ஸ்ரீமாகாளியம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 20க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






