search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோச வழிபாடு"

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவிலில் குரு வார பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சர்க்கரைப் பொங்கல், அபிஷேக பால் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு செய்திருந்தார். பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் தொண்டி சிதம்பரேஸ்வர் கோவில், தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஓரியூர் சேயுமானவர் கோவில், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு, நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    • திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.
    • மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.

    மூலவர்: நந்தீஸ்வரர்

    உற்சவர்: -

    அம்மன்/தாயார்: -

    தல விருட்சம்: -

    தீர்த்தம்: -

    ஆகமம்/பூஜை : -

    பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: -

    ஊர்: திருநந்திக்கரை

    மாவட்டம்: கன்னியாகுமரி

    மாநிலம்: தமிழ்நாடு

    பாடியவர்கள்: -

    திருவிழா:

    மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் உண்டு.

    தல சிறப்பு:

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். இந்த கோவிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    பொது தகவல்:

    பிரகாரத்தில் கணபதி, விஷ்ணு, சாஸ்தா, நாகர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.

    பிரார்த்தனை:

    சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோவிலை விட ஏற்ற கோவில் எதுவுமே இல்லை எனலாம்.

    அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப்பெறலாம்.

    நேர்த்திக்கடன்:

    சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    தலபெருமை:

    பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோவில்கள் என்கின்றனர்.

    சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோவில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.

    காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது.

    நட்சத்திர மண்டபம் :

    இந்த கோவிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.

    பரசுராமர் தன் தாயைக் கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது தாயைக்கொன்ற பாவம் தீர பரசுராமர் நந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து இங்குதான் அவரது பாவம் நீங்கியது.

    தல வரலாறு:

    ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோவிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர்.

    சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது.

    இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது.

    சிறப்பம்சம்:

    அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம்.

    • நந்தீஸ்வரருக்கு ரிஷபம் என்றும் பெயருண்டு.
    • ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் கோவில் திகழ்கிறது.

    மூலவர்: சொக்கலிங்கேஸ்வரர்

    உற்சவர்: -

    அம்மன்/தாயார்: மீனாட்சியம்மன்

    தல விருட்சம்: வன்னி மரம்

    தீர்த்தம்: -

    ஆகமம்/பூஜை : -

    பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: -

    ஊர்: வேந்தன்பட்டி

    மாவட்டம்: புதுக்கோட்டை

    மாநிலம்: தமிழ்நாடு

    பாடியவர்கள்: -

    திருவிழா:

    மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம். இக்கோவிலில் சிவனுக்குரிய வழக்கமான விழாக்கள் நடக்கின்றன. பிரதோஷம் தான் முக்கியம். சனிப்பிரதோஷம் என்றால் இரட்டிப்பு கூட்டம் வருகிறது.

    தல சிறப்பு:

    வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும்? சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோவிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு.

    இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது.

    இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

    பிரார்த்தனை:

    இங்குள்ள மீனாட்சியை வழிபட்டு, திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கப் பெறலாம். வறுமை நீங்கி செல்வம் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

    நேர்த்திக்கடன்:

    நேர்த்திக்கடனாக மீனாட்சிக்கு, மஞ்சள், குங்குமம் காணிக்கை கொடுத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கப் பெறலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டாக வைத்தும், பண நோட்டுகளை மாலையாக கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    தலபெருமை:

    நெய் நந்தீஸ்வரர்: இந்த நந்தியை "தம்பி நந்தி' என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் நந்தி மிகப்பெரிய அளவில் அமர்ந்து பக்தர்களை எப்படி கவர்ந்தாரோ, அதே போல வேந்தன்பட்டி நந்தியும் ஒரு அற்புதம் செய்து பக்தர்களை ஈர்த்துள்ளார்.

    இவ்வூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். அதை, புனிதம் கருதி இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமான சிவனை மானசீகமாக வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தனக்கு வயிற்று வலி உண்டானதாக உணர்ந்த பக்தர், தனக்கு நோய் குணமானால், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோவிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக்கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். நந்திக்கும் நெய் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

    அதிசய நெய்:

    இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் நந்தீஸ்வரருக்கு, நெய் அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சமயம் அபிஷேக நெய்யில், கோவிலுக்கு தீபம் ஏற்றினர். அப்போது, நெய் ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மாறியதாம். எனவே, அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது.

    பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வராதது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.

    ரிஷப ராசி கோவில்:

    நந்தீஸ்வரருக்கு ரிஷபம் என்றும் பெயருண்டு. எனவே, ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும்  இக்கோவில் திகழ்கிறது. ஜாதகத்திலோ அல்லது அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளாலோ பாதிக்கப்படும் இந்த ராசிக்காரர்கள், நிவர்த்திக்காக இங்கு வணங்குகின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோவில் என்பதால், நந்திக்கு அர்ச்சனை செய்யும் வழக்கமும் உள்ளது. கால்நடை வளர்ப்போர், அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிச் செல்கின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று அதற்கு புகட்டுகின்றனர். இதனால், அவற்றிற்கு நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு வணங்கி பசு மாடுகளை வாங்குவோர் முதலில் சுரக்கும் பால் மற்றும் முதலில் உருக்கிய நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வெற்றி பெறுவதற்காகவும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.

    மாட்டுப்பொங்கல் விசேஷம்:

    நந்தீஸ்வரர் தலையில் இரு கொம்புகளுக்கு நடுவே சக்கரம் உள்ளது விசேஷமான அமைப்பு. இவருக்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடக்கும். நல்லெண்ணெய் தவிர பிற அபிஷேகங்களும், இறுதியாக நெய்யால் அபிஷேகமும் நடக்கும். மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷ நாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே சமயத்தில் விசேஷ அபிஷேகம் நடக்கும். பின், நந்திக்கு பழங்கள், பூக்கள், இனிப்பு பதார்த்தங்கள், பட்சணங்கள், கல்கண்டு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்வர். பின், பிரதோஷநாயகர் கோவிலுக்குள் புறப்பாடாவார். இவ்வூரில் உள்ள கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் ஒரு வேப்பமரம் உள்ளது. இதில், இயற்கையாகவே நந்தியின் உருவம் தோன்றியிருக்கிறது.

    அக்னி காவடி வைபவம்: வைகாசி விசாகத்தை ஒட்டி இங்கு 3 நாள் விழா நடக்கும். விசாகத்தன்று "அக்னி காவடி" தூக்கும் வைபவம் விமரிசையாக நடக்கும். அப்போது, இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி தூக்கிக் கொண்டு, பூக்குழியில் இறங்குவர். நந்தீஸ்வரருக்கு முடிக்காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதுமுண்டு. கோவில் எதிரே நந்தி தீர்த்த தெப்பம் உள்ளது. சுவாமிக்கு இடப்புறம் மீனாட்சி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளித் தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

    தல வரலாறு:

    மதுரையில் உறையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம். இப்பகுதிக்கு சென்ற பாண்டியர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதரை பிரதோஷ வேளையில் வழிபட உருவாக்கியிருக்கலாம். இத்தல வரலாறு சரிவர கிடைக்கவில்லை. ஆயினும், இது பழமையான கோவில்.

    சோழர்களும் இத்தலத்தின் திருப்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோவிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டு வரப்பட்டன. இதில் பெரிய நந்தி, தஞ்சையில் வைக்கப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் உள்ளது. இரண்டு நந்திகளின் அமைப்பும் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. எனவே, இங்கு நந்தி வழிபாடே முக்கியமானதாயிற்று.

    கொடும்பாளூர் என்னும் தலத்தில் மூன்று சிவலிங்கங்களுடன் மூவர் கோவில் இருந்தது. அப்பகுதிக்கு போர் தொடுத்து வந்த அந்நியர்கள், அக்கோவிலை சேதப்படுத்தினர். இதனால், கோவில் அழிந்து, சிவலிங்கங்கள் மட்டும் இருந்தது. சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்த லிங்கங்களையும், நந்தியையும் எடுத்து வந்து வேந்தன்பட்டி, தெக்கூர் மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார். இவ்வூரில் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு 'சொக்கலிங்கேஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

    சிறப்பம்சம்:

    அதிசயத்தின் அடிப்படையில்: வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும்? சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோவிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

    • கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

    1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

    2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அமைதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்''என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

    3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

    5. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப்பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

    6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

    7. தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

    8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை" எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

    9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

    10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

    11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

    13. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

    14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

    15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

    17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

    18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

    19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

    20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

    21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

    22. காஞ்சிபுரத்தில் இராஜசிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

    23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

    24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

    25. பஞ்சமுக வாத்திய லட்சணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

    26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதி ரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

    27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

    28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

    29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

    30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

    31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

    32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

    33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

    34. 'நந்தி' என்ற வார்த்தையுடன் 'ஆ' சேரும்போது 'ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. 'நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

    35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

    36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

    37. நந்தி தேவருக்கு சிவபெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

    38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

    39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

    40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

    41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

    42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

    43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

    44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

    45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

    46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

    47. நந்தியை வழிபடும்போது, 'சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

    48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

    49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

    50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.

    • அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது.
    • சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான்.

    பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச்சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமை பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.

    பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்போம். அமிர்தத்தைப் பெற வேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆலகால விசம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத்தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விசம் வெளிப்பட்ட நாள் ஏகாதசித் திதியாகும். ஆலகால விசத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விசத்தை அப்படியே எடுத்து உண்டார். விசம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதி தேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விசமானது கழுத்திலேயே தங்கிவிட்டது. அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்பட்டு வரலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசியன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர். மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபொருமானிடம் தங்களை மன்னிக்கும் படி மனமுருகி வேண்டினார்கள். பரம கருணாமூர்த்தியான சிவபெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசப தேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும். அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4 - 6 பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13 ம் நாளும் பௌர்ணமியிலிருந்து 13 ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.

    பிரதோசத்தில் பத்து வகையுண்டு:-

    1. நித்திய பிரதோசம்:- தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.

    2. நட்சத்திர பிரதோசம்:- திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.

    3. பட்ச பிரதோசம்:- சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்ச லிங்க வழிபாடு செய்வது.

    4. மாதப் பிரதோசம்:- கிருஸ்ண பட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.

    5. பூர்ண பிரதோசம்:- திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது. சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

    6. திவ்ய பிரதோசம்:- துவாதசியும் திரயோதசியும் அல்லது திரயோதசியும் சதுர்த்தசியும் ஆக இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

    7. அபய பிரதோசம்:- ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.

    8. தீபப் பிரதோசம்:- திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.

    9. சப்த பிரதோசம்:- திரயோதசி திதியில் ஒள~ன நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.

    10. மகா பிரதோசம்:- ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.

    சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்தி தேவர்தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார். ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச்செய்து முறைப்படி பிரதோச பூஜை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார். நந்திதேவர் செய்த பூஜையானது கொடிமரத்தையும், பலிபீடத்தையும் இடதுபுறமாக கடந்து நந்திக்கு முதற்பூஜை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்தி தேவர் வரை வந்து நந்தி தேவரிற்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் நமோ பகவதே" என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூசை செய்தார்.

    நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.

    தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும்போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடி வரும் 4.30– 6.00 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுவதற்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. 13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களிற்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூசை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும்.

    சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக்

    கடைப்பிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.

    மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

    இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

    • தொண்டி, திருவாடானையில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அன்னபூரனேஸ்வர சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசம் நடந்தது. இதைெயாட்டி நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, அரிசி மாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நாகநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பூஜை ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்திருந்தனர். சர்க்கரை பொங்கல், எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
    • பூஜைக்கான ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்புஈசுவரர் கோவிலில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர், தயிர், அரிசிமாவு, விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நாகநாதர், பைரவர், விஷ்ணு துர்க்கை, விநாயகர் முருகன், கல்யாண நவக்கிரகம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல் தொண்டி சிதம்பரேசுவரர், திருவாடானை ஆதிரத்தினேசுவரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேசுவரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. உற்சவமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் பூஜை ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    ×