ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
Published on

ராமநாதபுரம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து 24 மாணவர்கள் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் வென்று ராமநாதபுரம் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com