search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தவழியான் சுவாமி கோவில்"

    • முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.
    • யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் லாந்தை கிராமத்தில் சந்தவழியான் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதையொட்டி நேற்று மாலை மங்கல இசை, எஜமான் சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இன்று (சனிக்கிழமை) மங்கல இசை, சூரிய பூஜை, இரண்டாவது யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மங்கல இசை கோமாதா பூஜை, நாடிசந்தானம், பரிஷாகுதி, உயிர் ஓட்டம், மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடக்கிறது.

    சந்தவழியான் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களான முனியப்ப சாமி, விநாயகர், பாதாள காளியம்மன், கருப்பணசாமி ஒச்சமை, நாச்சம்மை, நாகக்கன்னி, சோனை கருப்பர் ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு போலீசார் மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை சந்தவழியான் சுவாமி கோயில் குடிமக்கள் செய்து வருகின்றனர்.

    ×