என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை - 29 (திங்கள்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி இரவு 11.43 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : சித்திரை பிற்பகல் 2.09 மணி வரை பிறகு சுவாதி

    யோகம் : சித்த/அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை

    சர்வ ஏகாதசி. சுபமூகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-புகழ்

    கடகம்-செலவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-உறுதி

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-தனம்

    தனுசு- வரவு

    மகரம்-சாந்தம்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-அன்பு

    • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-28 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி இரவு 10.06 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : அஸ்தம் நண்பகல் 12.06 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சிபுரம், சமயபுரம், புன்னைநல்லூர், சோழவந்தான் மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-அமைதி

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-இன்பம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-பாராட்டு

    தனுசு- நற்செயல்

    மகரம்-பக்தி

    கும்பம்-மேன்மை

    மீனம்-பயணம்

    • திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது.
    • . வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் திருச்சிறுபுலியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, தலசயனப் பெருமாள் கோவில்.

    திருமாலுக்குரிய 108 திவ்ய தேசங்களில் 24-வது தலமாக இக்கோவில் போற்றப்படுகிறது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயன கோலத்தில் அருளும் பெருமாள், இத்தலத்தில் பாலகனாக சயன கோலத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

    ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும், கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்குவதற்காக ஆதிசேஷன் இத்தலம் வந்து தலசயனப் பெருமாளை நோக்கி தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தில் காட்சி அளித்தார். மேலும், அவரை தனது படுக்கையாக ஏற்றுக்கொண்டு, குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி தருவதாக தல வரலாறு கூறுகிறது.

     

    கோவில் தோற்றம்

    கோவில் நான்கு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கருவறையில் தலசயனப் பெருமாள், நந்த வர்த்தன விமானத்துடன் சிறிய வடிவில் சயன கோலத்தில் உள்ளார். அவர் பாதத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் காட்சி தருகிறார். ஆதிசேஷன் தனிச் சன்னிதியில் ஆனந்தாழ்வார் என்ற பெயருடன் காணப்படுகிறார்.

    ஆலயத்தில் சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர விழா போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    நாக தோஷம்,மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், எதிரிகளால் ஆபத்து உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
    • திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-27 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி இரவு 8.49 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : உத்திரம் காலை 10.30 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் புறப்பாடு கண்டருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.

    ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோ பால சுவாமி கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-பெருமை

    சிம்மம்-பக்தி

    கன்னி-பணிவு

    துலாம்- வாழ்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- ஆதாயம்

    மகரம்-சிறப்பு

    கும்பம்-கடமை

    மீனம்-உண்மை

    • கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
    • சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனாய சங்கமேஸ்வர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அசுரன் ஒருவன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, சாகா வரம் பெற்றான். தேவலோகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை கொண்ட அந்த அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவபெருமானை வேண்டும்படி கூறினார். அதன்படி, சங்கு புஷ்பங்கள் நிறைந்த இப்பகுதியில் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். அசுரனை அழிக்குமாறு வேண்டினர். அதன்பின், சிவபெருமான் அசுரனை வதம் செய்ததாக கூறப்படுகிறது.

    சிவபக்தனான கரிகால் சோழ மன்னன், குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தான். ஒரு நாள், சிவன் அற்புதம் செய்த தலங்களில் சிவாலயங்கள் கட்டுவதாக கனவு கண்டான். இது குறித்து தனது குருவிடமும், ஆன்றோரிடமும் ஆலோசனைக் கேட்டான். அதன்படி, சிவன் அற்புதம் செய்த இடங்களில் கோவில்களை எழுப்பினான். அவ்வாறு அவன் கட்டிய சிவாலயங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது.

    கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, இறைவன் நம் தலைவிதியை மாற்றும் வல்லமை உள்ளவர் என்பதை குறிப்பதாக உள்ளது. மரணத்தருவாயில் உள்ள இளைஞர்கள் இங்கு வந்து வழிபட்டால், அவர்களது தலைவிதி மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    சுவாமியின் இடதுபுறத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கோவில் சுற்றுப் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரிய பகவான், காப்பு விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர். 63 நாயன்மார்களின் திருவுருவ சிலைகளும் உள்ளன. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    மூலவர் மற்றும் அம்பாளின் சன்னிதிக்கு இடையில் சோமாஸ்கந்தராக உள்ள முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காணப்படுகிறார். இவரது ஆறு முகங்களும் நேராக நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களை தாங்கியபடி காட்சி தருகிறார். கோவில் அமைப்பை பார்க்கும்போது, முருகனே மூலவராக அருள்பாலிக்கும் வகையில் உள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-26 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி இரவு 8.00 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூரம் காலை 9.21 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்போற்சவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி திருவீதியுலா. மெய்பொருள் நாயனார் குரு பூஜை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்கையம்மன், கதிராமமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்கையம்மன் தலங்களில் ஸ்ரீ துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் காலை சிறப்பு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நேர்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-சிறப்பு

    சிம்மம்-ஊக்கம்

    கன்னி-அமைதி

    துலாம்- கணிப்பு

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- இன்சொல்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-அன்பு

    மீனம்-நற்செயல்

    • அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும்.
    • மார்கழி மாதம் இறை வழிபாட்டிற்கே உரிய மாதம்.

    தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

    மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்கள் கண் விழிக்கும் அதிகாலை பொழுதாக சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் ஆகும். அவர்கள் கண் விழிக்கும் சமயத்தில், நாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டு, என்ன வேண்டிக் கொண்டாலும் அதை அப்படியே அவர்கள் அருள்வார்கள்.

    அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரும் காலம் என்பதால் இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் வாசலில் கோலமிட வேண்டும் என்றும், ஆண்கள் பஜனைக்கு செல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்தார்கள்.

    மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து விட்டு இறை நாமங்களை ஒரு முறை சொன்னால் கூட, மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை நாம ஜபம் செய்ததற்கு சமம்.

    ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோவில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

    வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மார்கழி மாதம். இது இறை வழிபாட்டிற்கே உரிய மாதம் ஆகும். அதனால் தான் அர்ஜூனனுக்கு செய்த கீதை உபதேசத்தில், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் விரும்பி சொல்லி உள்ளார்.

    • சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது.
    • சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில். தென் தமிழகத்தின் பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் ஆகாயத் தலமாக போற்றப்படுகிறது.

    தல வரலாறு

    சிவபக்தனாக வீரபாகு பாண்டிய மன்னனுக்கும், விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்து வந்தது. விக்கிரசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. இதனால், அவனை வஞ்சகத்தால் கொல்ல முடிவு செய்தான். அதன்படி, அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை தன்னுடைய சேவகனிடம் பரிசாக அனுப்பி வைத்தான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவார்.

    இறைவன் அருளால், சோழ மன்னனால் தனக்கு ஏற்பட இருந்த சதித் திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்து கொண்டான். தனக்கு பரிசாக அனுப்பி வைத்த நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே அணிவித்தான். சிறிது நேரத்தில் அந்த சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் காப்பாற்றிய சிவபெருமானுக்கு பாண்டிய மன்னன் கோவில் எழுப்பினான். மேலும், இத்தல இறைவனுக்கு 'நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி' என்றும் பெயர் சூட்டினான்.

    அதே சமயம் சிவபெருமானின் கோபத்தால் விக்கிரமசோழனின் கண்பார்வை பறிபோனது. பிறகு, தன் தவறை உணர்ந்த விக்கிரமசோழன், பாண்டிய மன்னனிடம் மன்னிப்பு கேட்டான். மேலும், தனக்கு மீண்டும் கண்பார்வை கிடைக்க வேண்டி தேவதானம் வந்து இத்தல இறைவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரமசோழனுக்கு ஒரு கண்பார்வை மட்டும் கிடைத்தது.

    இதையடுத்து மற்றொரு கண்ணுக்கும் பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டினான். அப்போது சிவபெருமான், ''மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்றால், இவ்வூரின் அருகிலேயே இன்னும் ஒரு கோவிலை எழுப்பு'' என்று அசரீரியாக ஒலித்தார். அதன்படி அருகில் இருக்கும் சேத்தூர் என்ற இடத்தில் விக்கிரமசோழன் கோவில் கட்டினான். இதையடுத்து, அவனுக்கு மற்றொரு கண்பார்வையும் கிடைத்தது.

    அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்களின் நன்மைக்காக பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி ஊசி முனையில் நின்று தவம் இயற்றினார். இதனால் இங்குள்ள அம்பாள், தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

    கோவில் அமைப்பு

    கோவில் முகப்பு வாசலை தாண்டி உள்ளே நுழைந்ததும், கொடிமர மண்டபம் காணப்படுகிறது. அதில் கொடிமரம் அழகுற காட்சி அளிக்கிறது. அதையடுத்து, கொலுமண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப மண்டபம் என மண்டபங்கள் காணப்படுகின்றன. கருவறையில் லிங்க வடிவமாக நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி - சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோவில் வெளிச்சுற்று பிரகாரத்தில் திருக்கொழுந்தீஸ்வரர், கண் கொடுத்த சிவன், கண் எடுத்த சிவன் ஆகிய மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்த மூன்று சன்னிதி களையும் வழிபட்டு வந்தால் விரைவில் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    குழந்தை பாக்கியம் வேண்டி வரும் தம்பதியர், இக்கோவிலில் உள்ள நாகலிங்க மரத்தின் பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு, அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று உண்டால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் ராஜபாளையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது தேவதானம். அங்கிருந்து உள்ளே 3 கி.மீ. தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-25 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி இரவு 7.43 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : மகம் காலை 8.44 மணி வரை பிறகு பூரம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம்.

    தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-துணிவு

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-நன்மை

    கன்னி-சாதனை

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- சாந்தம்

    மகரம்-பெருமை

    கும்பம்-யோகம்

    மீனம்-மேன்மை

    • அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார்.
    • ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது.

    சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் 64. அவற்றில், ஆழ்கடலில் யாருக்கும் அடங்காமல் பல அட்டூழியங்கள் புரிந்த பயங்கர சுறாமீனை அடக்கி, மீனவர் குல மகளாக அவதரித்த உமாதேவியை கரம்பிடித்து மண முடித்த திருத்தலமாய் மாரியூர் என்னும் கடற்கரை ஊர் உள்ளது. இங்கு பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்தில் 57-வது நிகழ்வாக நடைபெற்ற வலைவீசிய படலத்தைப் பற்றி பார்ப்போம்.

    தல வரலாறு

    ஒரு நாள் மாலைப்பொழுது தனிமையிடத்தில் பரம்பொருளாகிய ஈசன், நால்வகையான வேத நூல்களின் உட்பொருளை உமாதேவிக்கு விளக்கி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த விநாயகரும், முருகரும் அன்னையின் மடியில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். இதை எதிர்பாராத உமாதேவி தன் கவனத்தை மாற்றி குழந்தைகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

    தர்மநெறி சாத்திரங்களைச் சொல்லும் வேத தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு, குழந்தைப் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பார்வதியை கோபத்துடன் பார்த்தார் ஈசன். ''எந்தவித தர்மமோ, முறையான விரத நெறிகளோ எதுவும் அறியாத மீனவர் குலத்தில் ஒரு பெண்ணாகப் பிறப்பாயாக'' என ஈசன், உமாதேவிக்கு சாபமிட்டார். இதனைக் கேட்டதும் பார்வதி மிகவும் கவலை அடைந்தாள்.

    இறைவன், "தேவி இதற்காக வருந்த வேண்டாம். நீ மீனவர் மகளாக வளர்ந்து பருவமங்கை ஆகும் வேளையில் நானே நேரில் வந்து உன் கரம் பிடிப்பேன்" என ஆறுதல் சொன்னார். தாய்க்கு இப்படியொரு சாபம் கொடுத்த தந்தையின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டார் ஆனைமுகன். ''இந்த வேதங்களால் அல்லவா என் தாய்க்கு சாபம் கிடைத்தது. இவைகள் இனிமேலும் இங்கு இருக்கக்கூடாது'' என முடிவெடுத்தார். அடுத்த கணமே வேத சுவடிகளை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிந்தார்.

    அதே நேரத்தில் ஆறுமுகனும் தன் பங்குக்கு தனது தந்தையின் கையிலிருந்த சிவஞான போத சுவடிகளை பிடுங்கி கடலில் வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சிவபெருமான், திகைத்துப் போனார். இதனால் ஈசனின் கோபம், தாங்கள் தனித்திருக்கும் வேளையில் அனுமதியில்லாமல் குழந்தைகளை உள்ளே அனுமதித்த நந்திதேவன் மேல் திரும்பியது. "இத்தனை அசம்பாவிதங்களுக்கும் காரணமானவன் நீதான். எனவே, நீ பயங்கர சுறா மீனாகப் பிறந்து, பிறரது வசைகளுக்கு ஆளாவாய்" என சாபமிட்டார்.

    அதன்படி அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார். வருடங்கள் பல உருண்டோடியது. மணமுடிக்கும் பருவமங்கையாக பார்வதி வளர்ந்திருந்தார். அதே சமயம், அன்றாடம் ஆழ்கடலில் மீனவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகளைக் கொடுத்து வந்தது ஒரு கொடிய சுறா.

    ஒரு கட்டத்தில் இனியும் சுறாவின் அட்டூழியத்தை தாங்கிக்கொள்ள முடியாது என முடிவெடுத்த மீனவர் தலைவர், ஒரு அறிவிப்பையும் வெளியிட்டான். எவர் ஒருவர் ஆழ்கடலில் துன்புறுத்தும் சுறாவை அடக்கி பிடிக்கிறாரோ, அவருக்கு தன் மகளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. அதே சமயம் இது தான் பார்வதிதேவியை ஆட்கொண்டு கரம்பிடிக்க வேண்டிய தருணம் என முடிவெடுத்தார் இறைவன்.

    ஒரு மீனவர் வேடம் பூண்டு மாரியூருக்கு வந்த இறைவன், சுறாவை அடக்க வந்திருப்பதாக ஊர்க்காரர்களிடம் கூறினார். உடனே கடலுக்குள் அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆழ்கடலில் ஆர்ப்பாட்டம் செய்துவந்த சுறாவை இறைவன் தனது வலையில் எளிதாக பிடித்தார். இதனால், கரையிலிருந்த மீனவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஏற்கனவே, மீனவ தலைவனின் வாக்குப்படி அவரது மகளான பார்வதியை கரம் பிடித்தார், இறைவன்.

     

    மாரியூர் கடலில் நடத்தப்படும் வலைவீசும் படலம் நிகழ்ச்சி

    இந்த சுவையான புராண நிகழ்வு நடந்ததை எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமித் திருநாளில் கடலுக்குள் வலை வீசும் படலத்தை உண்மை சம்பவம் போல் நடத்திக் காட்டுகின்றனர். பதினொரு நாட்கள் இவ்விழா நடைபெறும். சுறாவை அடக்கி முடித்ததும் சுவாமி பூவேந்தியநாதர், அம்பாள் பவளநிற வல்லி திருமண நிகழ்வு கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் அலங்கார பந்தலில் வெகுவிமரிசையாக நடைபெறும். மணவிழாவையொட்டி நடைபெறும் பிரமாண்ட அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் கலந்துகொள்வர்.

    பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இடைக்குள நாடு என்ற உள்நாட்டுப் பிரிவின் கீழ் இப்பகுதி அடங்கி இருந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டப்பட்டன. சுவாமி சன்னிதியின் வலப்பக்கம் அம்பாள் கோவில் உள்ளது. செவிவழிச் செய்தியின்படி, வருணபகவான் தன் சாபம் நீங்க, இத்தல பரம்பொருளுக்கு லிங்க பிரதிஷ்டை செய்து வைத்தாராம்.

    ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது. இதில், வருணனது கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டான். பல நாட்கள் கடலில் தத்தளித்த வருண பகவான், இறுதியில் மாரியூர் கடற்கரையில் வந்து தங்கினார். அங்கு, மனதில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரது பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன், அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தந்தார். வருண பகவான் கரையேறிய பகுதியாக இத்தல தீர்த்த கட்டம் விளங்குவதால் 'வருண தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் இதை நினைவுகூரும் விதமாக வருணபகவானுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூடுவர். சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் பக்தர்கள் வசதிக்காக கோவில் எதிரே பெரிய சத்திரம் ஒன்று கட்டி வைக்கப்பட்டது. தல விருட்சம் அபூர்வமான முன்னை மரம் ஆகும். சுவாமி சன்னிதி உள்சுற்றில் உள்ள தீர்த்தக் கிணற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் போட்டால் அது செழுவனுார் சிவாலய திருக்குளத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது.

     

    கோவில் தோற்றம்

    அமாவாசைதோறும் தல விருட்சத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருமணத் தடை, கணவன்- மனைவி ஒற்றுமை, வேலைவாய்ப்பு, நீண்ட காலமாக இருக்கும் கோர்ட்டு வழக்குகள் ஆகிய பிரச்சனைகளுக்கு யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்யப்படுகிறது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் பவளம் மகளிர் குழுவினரால் அம்பாள் துதிப்பாடல்கள் பாடப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோம வாரத்தில் 108 சங்காபிஷேக வழிபாடு, ஆடிப்பூரம் அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி ஐயப்பன் சன்னிதியில் விரதமிருக்கும் பக்தர்களின் பஜனை வழிபாடு நடைபெறும். கோவில், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து வாலிநோக்கம் செல்கிற நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் மாரியூர் கடற்கரைத் தலம் உள்ளது.

    • தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம்.
    • திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-24 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி இரவு 7.58 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : ஆயில்யம் காலை 8.36 மணி வரை பிறகு மகம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை

    இன்று தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

    திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு. அஹோபிலமடம் ஸ்ரீமத் 31-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கரின் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி பவனி. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-தனம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-சலனம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-அசதி

    தனுசு- ஆதரவு

    மகரம்-செலவு

    கும்பம்-வரவு

    மீனம்-சிறப்பு

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

    9-ந் தேதி (செவ்வாய்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * குரங்கணி முத்து மாலையம்மன் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    10-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருநாகேசுவரம் நாகநாதசுவாமி பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    11-ந் தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    12-ந் தேதி (வெள்ளி)

    * வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (சனி)

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * திருநாகேசுவரம் நாக நாதசுவாமி, திருவாஞ்சியம் முருகப்பெருமான் தலங்களில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி தலங்களில் பவனி வரும் காட்சி.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (திங்கள்)

    * முகூர்த்த நாள்.

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம்.

    * திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, குன்றக்குடி, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    ×