என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Mahalakshmi Temple"

    • கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது.
    • கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

    கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது, மகாலட்சுமி கோவில். இந்த கோவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இக்கோவில் 'இரண்டாவது கோலாப்பூர்' என்றும் போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவராக மகாலட்சுமி தாயார் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மகாலட்சுமி தேவியின் தீவிர பக்தர் ஒருவர் இருந்தார். ஒரு சமயம் அந்த பக்தர் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து மகிழ்ந்த மகாலட்சுமி, சுயம்புவாக தோன்றி பக்தருக்கு காட்சி அளித்தார். இதையடுத்து அப்பகுதியில் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கிய சிறிய வரவேற்பு வளைவு உள்ளது. அதில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த நிலையில் மகாலட்சுமி தாயார் காட்சி தருகிறார். கருவறையின் வாசலில் துவாரபாலகிகள் மற்றும் அஷ்டலட்சுமிகளின் உருவங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கின்றன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் மகாலட்சுமி தாயார் அருள் வழங்குகிறார். அவர் அருகில் கருப்புக் கல்லால் ஆன ஸ்ரீதேவி - பூதேவியுடன் கூடிய வெங்கடேசப் பெருமாள் சிலை உள்ளது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை நிலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த இடத்தை தோண்டும்போது, அதில் வெங்கடேசப் பெருமாள் சிலை கிடைத்தது. அந்த சிலையே கருவறையில் மகாலட்சுமியின் அருகில் காணப்படுகிறது. கருவறையை பார்த்தபடி, தனிச் சன்னிதியில் ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

    கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. இருப்பினும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தேவியை வழிபட்டு வந்தால் செல்வ வளம் பெருகும், வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இக்கோவில், ராய்ச்சூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது. இதைெயாட்டி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடைபெற்றது. மேலும் மகா பூர்ணாஹூதி , சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் உடுப்பறை அம்மன் கோவில் சிவசக்தி சுவாமிகள், அகில தாந்திரி பிரசார சபா மாநில செயலாளர் பூசாரிப்பட்டி மகாமேரு பீடம் சண்முகசுந்தர சுவாமிகள், கோவை கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், பொள்ளாச்சி தங்கம் தா. சுவாமிகள் , கோவை கருமாரியம்மன் பீடம் செந்தில் சுவாமி, ஸ்ரீ சுந்தர்சனம் மடம் மயிலம்பட்டி ஸ்ரீமத் பராங்குச பரகால ஸ்ரீரங்க லம்பி ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் , டாக்டர் எல் .கே. ஜெயசூர்யா நாராயணன் சுவாமிகள்,அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் பஞ்ச சக்தி தேவாலயம் கிருஷ்ணமூர்த்தி ,

    சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் தாமோதரன்,திரைப்பட இயக்குனர் பாரதி மோகன் , புளியம்பட்டி பாலுசாமி சாஸ்திரிகள்,சேலம் சுரேஷ் பாபு, நிலக்கிழார் பிரபு, பொள்ளாச்சி ராமசாமி ,பெப்சி பெட் விஜயகுமார்,தென் மாவட்ட கவுண்டர் சங்க மாநில தலைவர் முத்துப்பாண்டி , கர்நாடக மாநிலம் நரசிம்ம கவுடா சீரா தாலுகா ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு கவுன்சிலர் கோமதி வி. எஸ். ராதாகிருஷ்ணன், தி.மு.க. இல. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×