என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 31 ஜனவரி 2026: குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு, தை - 17 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி காலை 8.02 வரை பிறகு சதுர்த்தசி நாளை காலை 4.40 வரை பிறகு பெளர்ணமி
நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.53 வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகு காலம் : காலை 9.00 - 10.30 மணி.
எமகண்டம்: நண்பகல் 1.30-3.00 மணி.
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7-8 மணி வரை. மாலை 5-6 மணி வரை
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்
குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. கோயம்புத்தூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம். பழனி ஸ்ரீ ஆண்டவர் காலை ஸ்ரீ தெய்வானை திருமணம், இரவு ஸ்ரீ வள்ளித் திருமணக் காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ செளந்தரநாயகி அம்மன், திருவாடனை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் காலை அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மேன்மை
ரிஷபம் - நலம்
மிதுனம் - சிறப்பு
கடகம் - வரவு
சிம்மம் - இரக்கம்
கன்னி - ஆரோக்கியம்
துலாம் - லாபம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - பணிவு
மகரம் - கீர்த்தி
கும்பம் - பெருமை
மீனம் - பொறுப்பு






