search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temples"

    • கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நிறைவுவிராலிமலை முருகன் கோவிலில் இன்று இரவு திருக்கல்யாணம்
    • திரளான பக்தர்கள் குவிந்தனர்

    விராலிமலை 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலைமேல் முருகன்-வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருகன்- வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் காலை மற்றும் மாலையில் நடைபெற்றது. மேலும், நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகபெருமான்-வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனிடம் முருகபெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் அதன் பின்னர் இரவு 7 மணியளவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது விராலிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' பக்தி கோஷம் விண்ணை பிளந்தது.

    அதனை தொடர்ந்து முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பால், இனிப்பு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். இவ்விழாவின்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் ஏதும் நடக்காத வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் 13 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    விழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முருகப்பெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்வுக்கு பின்னர் நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று முருகப்பெருமான திருக்கல்யாண கோலத்தில் தரிசிப்பது மிகவும் விசேசமானது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளனர். முன்னதாக சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    நாளை (திங்கட்கிழமை) முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண ஊர்வலமும் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளியறை ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி விழாவானது நிறைவு பெறுகிறது.

    இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சஷ்டியையொட்டி சூரசம்காரம் விழா கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    கோவிலில் அமைந்துள்ள முத்துக்குமாரசுவாமி எனும் முருகப்பெருமானுக்கு தினந்தோறும் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான், வீரபாகு, சூரன் ஆகியோர் சப்பரத்தில் சத்தி சாலை மாரியம்மன் கோவில் வழியாக வந்து பவானிசாகர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று முருகப்பெருமான் வீரபாகு உடன் சேர்ந்து முதலில் கஜமுகனை வதம் செய்தார்.

    இதையடுத்து 2-வதாக வானு கோவணை வதம் செய்தார். 3-வதாக சிங்க மகனை வதம் செய்து 4-வதாக கோவில் வளாகத்தில் சராகா சூரனை வதம் செய்துவிட்டு வான வேடி க்கைகளுடன் முருகப்பெரு மான் சிவபெருமானுக்கு சிவ பூஜைகள் செய்து முத்துக்குமாரசாமி எனும் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் இருந்து முருகன், வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது.

    11 மணிக்கு மகா பூர்ணாகுதியும் 11.30 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடை பெற்றது. தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானை க்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து நேற்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்பு நேற்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடந்தது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச் சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைத்தார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவார த்தில் எழுந்தருளி இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடி க்கை மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் நிகழ்சி யை ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயபத்தியுடன் கண்டு களித்தனர்.

    இதில் மேற்கு ராஜா வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ராஜா வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ராஜா வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெரு மான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். அதை தொடந்து இன்று காலை 10.30 மணிக்கு முருகப்பெரு மான் தெய்வானையை மணம் செய்யும் திருமண விழா நடைபெற்றது.

    கந்த சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் புகழிமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாள் விழாவை முன்னிட்டு பாலசுப்ரமணிய சுவாமிக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-வது நாளை முன்னிட்டு சுப்பிரம ணியருக்கு பல்வேறு வகை யான வாசனை திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்ப ட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியர் சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே பாலம லையில் உள்ள பாலசுப்பி ரமணிய சுவாமி கோவிலி லும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .மேலும் நொய்யல் சுற்று வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமா னை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, 13-ந் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்குகிறது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், வேல் பூஜை தொடர்ந்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் கந்த பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் திருக்கல்யாண வைபவம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், அபிஷேகம் மற்றும் தீபாராதனை போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 13-ந்தேதி அபிஷேகம், காப்புகட்டுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா தொடங்குகிறது. மேலும் திருக்கல்யாண உற்சவம், மகாதீபாராதனை, சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 13- ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர். தொடர்ந்து அலகுமலை ஆஞ்சநேயர் வளாகத்தில் உள்ள சண்முகம் மஹாலில் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 14-ந் தேதி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. மேலும் 18-ந்தேதி மதியம் 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் சுவாமி கோவிலில் சூரனை வதம் செய்ய பாலதண்டாயுதபாணி சக்திவேல் வாங்கும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை, 5 மணி அளவில் சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சமகால மூர்த்திக்கு சாந்தாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் கங்கணம் களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 19-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
    • முருகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் கிருத்திகையொட்டி நேற்று முருகருக்கு சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்வைகாசி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல பல்லடம் காந்தி ரோடு பால தண்டாயுதபாணி கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் முத்துக்குமாரசுவாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர்.
    • டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை:

    வைகாசி மாதம் பவுர்ணமி தினமான வைகாசி விசாகம் அன்று தமிழ்க்கடவுள் முருகன் அவதரித்தார். இதையொட்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் விழாக்கள் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

    சிறப்பு வழிபாடு

    அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர். தொடர்ந்து அங்கு தங்களது நேமிதங்களை நிறைவேற்றும் விதமாக கடலில் இருந்து மண் சுமந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

    மாநகர பகுதிகள்

    இதேபோல் மாநகர பகுதி யில் உள்ள டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், பாளை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அவர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

    இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அங்கு சிவநேச செல்வர்கள் கலந்து கொள்ளும் வைகாசி விசாக சிவ பூஜை வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரு வுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம், அடியார்கள் கலந்து கொன்டனர். சந்திப்பு சாலை குமாரசுவாமி கோ விலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜை கள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர்.

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், செப்பு தேரில் சண்முகரும், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் நான்கு ரத வீதியையும் சுற்றி வீதி உலா வர உள்ளனர்.

    • பால்,தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார்.

    பல்லடம் :

    வைகாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.

    இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம், பால்,தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்சித்திரை மாததேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதே போல பல்லடம் காந்தி ரோடு பால தண்டாயுதபாணி கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைநடைபெற்றது இதில் திரளானபக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டார பகுதியில் உள்ள மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில்பங்குனி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல பல்லடம் மங்கலம் ரோடு பால தண்டாயுதபாணி திருக்கோவில், பொன் காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன.
    • பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, முத்துக்குமார் நகரில் உள்ள பாலமுருகனுக்கு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நேற்று செவ்வாய் கிழமை மாலை பாலமுருகனுக்கு சந்தனம், தேன், பன்னீர், மலர், விபூதி, கனி உள்ளிட்ட 21 அபிஷேகங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை முத்துகுமார் நகர் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அதேபோல் எல்.கே.சி. நகரில் உள்ள பாலமுருகனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×