என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speacial Pooja"

    • உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் பால சுப்பிரமணிய சுவாமி மற்றும் உற்சவர் முத்துக்குமார சுவாமிக்கு பால், தயிர், நெய், பன்னீர், விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு, எலுமிச்சை சாறு, கும்பநீர் உட்பட 18 வகையான நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து விபூதி அலங்காரம் மற்றும் பட்டாடைகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    இக்கோவில் அடி வாரத்தில் உள்ள கருணை ஆனந்தா சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விபூதி, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் ராணி பாலகுமாரி நாச்சியார், ராஜா சேவுகப்பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னத்தம்பியார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். சிவகிரி கருப்பாயி நாச்சியார் கட்டளைக்கு பாத்தியப்பட்ட (தளத்துக்கோவில்) பால சுப்பிரமணியர் கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவில் முத்துக்குமாரசாமி சப்பரத்தில் பவனி வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிவகிரி அழுக்கு சித்தர் சுவாமிகள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சிவகிரி அருகே உள்ள கூடலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவகிரி, சங்கரன்கோவில், வாசு தேவநல்லூர், புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×