search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi"

    • நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
    • மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நாளான 4-ந்தேதிக்கு பிறகு ராகுல்காந்தி தியானத்துக்கு சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    'ஜூன் 4-ந்தேதி மாலை, இளவரசரும்(ராகுல் காந்தி) தியானத்திற்குச் செல்வார்.குகையைத் தேடும் பணி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, பிரதமர் மோடி தேசிய ஒற்றுமையின் உச்சம். காஷ்மீரில் இருந்து 370-வது சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டியது. கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டுதல், முத்தலாக் நீக்கம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல். முழு உலகிலும் இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டியது உள்ளிட்டவை யெல்லாம் சாதாரண சம்பவங்கள் இல்லை.

    இதனால்தான் பிரதமர் மோடி மீது இறைவனின் மகத்தான கருணை இருப்பதாக நான் எப்போதும் கூறுகிறேன். தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தவுடன், அசுர சக்திகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ஆன்மிக பலம் பெற கன்னியாகுமரிக்கு தியானம் செய்யச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை கைவிடவில்லை.

    அதிகாரம் வருவதும் போவதும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை உணர்கிறார்கள். மோடியின் கைகளில் நாடு பலமாக இருப்பதாக நாட்டு மக்கள் உணர்கிறார்கள் என்றார்.

    • ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் கார்கே.
    • அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா என பூனாவாலா கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்தால் நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாரர்ஜூன கார்கே தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மல்லிகார்ஜுன கார்கே (இந்தியா கூட்டணியின் பிரதமர் முகத்திற்கு) விருப்பம் எதுவாக இருந்தாலும், அது பொதுமக்களின் விருப்பமா என்பதுதான் கேள்வி?

    காங்கிரசுக்கோ அல்லது இந்தியா கூட்டணிக்கோ ஆட்சிக்கு வருவதற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

    ஆனால் மல்லிகார்ஜுன கார்கே தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா?

    இந்தியா கூட்டணி கடைசிக் கட்டத்தில் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளப் போவதில்லை. டெல்லியில் நட்பைக் கடைப்பிடித்தவர்கள் பஞ்சாபில் எதிரிகளாக மாறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    • இதுவரை நடந்த ஓட்டுப்பதிவின் படி இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்க போகிறது.
    • கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வந்துள்ளீர்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. 57 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    இதுவரை நடந்த ஓட்டுப்பதிவின் படி இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்க போகிறது. கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க வந்துள்ளீர்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    இன்று பெருந்திரளாக வந்து ஆணவம் மற்றும் கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள இந்த அரசுக்கு இறுதி அடியாக உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது ஜூன் 4-ந்தேதி சூரியன் நாட்டில் புதிய விடியலை கொண்டு வரப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
    • ராகுல் காந்தி இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரையை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு.

    ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

    பலரால் உயர் பதவிக்கான யதார்த்தமான ஒருமித்த வேட்பாளராக ராகுல் காந்தி பார்க்கப்படுகிறார்" என்றார்.

    இதேபோல், " பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் ராகுலுக்கு தனது பிரச்சார மேலாளராக ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அவர் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்" என்றார்.

    • மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான பிரச்சினைகளில் தேர்தலில் போராடி வெற்றி பெற்றோம்.
    • காங்கிரஸ் கட்சியினருக்கு இந்தியா கூட்டணியின் அரசு அமையப் போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    கடைசி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில் 7-ம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகிறது.

    தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நாட்டின் மகத்தான மக்களுக்கு வணக்கம் செலுத்தும் போது, காங்கிரஸ் கட்சியினருக்கு இந்தியா கூட்டணியின் அரசு அமையப் போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன்.

    நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் காப்பாற்ற உறுதியாக நின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான பிரச்சினைகளில் தேர்தலில் போராடி வெற்றி பெற்றோம்.

    விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை திசைதிருப்ப பலமுறை முயற்சித்தாலும் அவர்களின் குரலை உயர்த்தினோம்.

    கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு இயந்திரங்களை வைத்துள்ள அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்

    இந்தியா ஜெயிக்கப் போகிறது" என்று பேசியுள்ளார்.

    • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா?
    • மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை (1982) எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை" என்ற பிரதமரின் கருத்து எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?

    ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு (இறப்பு 1955) 'காந்தி' படம் வெளிவந்த பிறகுதான் (1982) மகாத்மா காந்தியைப் பற்றி தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

    • ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
    • தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது.

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மகாத்மா காந்தியைப் பற்றி அறிய 'முழு அரசியல் அறிவியல்' படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    • போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது.
    • அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் வேட்பாளர் அமரிந்தர் சிங்கை ஆதரித்து தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    போதைப்பொருள் பிரச்சனை பஞ்சாபில் இன்று கூட இருந்து வருகிறது. அது அதிகரித்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பஞ்சாப் முழு அதிகாரம் மற்றும் ஆக்ரோசத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக போராட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நேற்று மல்லிகார்ஜூன கார்கே, "பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு போதைப்பொருள் பிரச்சனை மிகப்பெரிய சவாலாகியுள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை மோசமடைந்து வருகிறது. போதைக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக விவசாயிகள் நிலைத்தை விற்று, தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் ஒவ்வொருவரும் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைமையினா ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன.
    • தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாட்னா:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதிய விருந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த வீடியோவில் தேஜஸ்வி யாதவ், ராகுல்ஜி இப்போது 2 முறை ஆட்டிறைச்சி சாப்பிட்டார் என ஜோக் அடிக்கும் காட்சிகள் உள்ளது.

    யாதவ் குடும்பத்தில் மதிய உணவு என்ன என்ற தலைப்பில் அந்த வீடியோ தொடங்குகிறது. அதில், தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி மதிய உணவு சாப்பிடும் காட்சிகள் உள்ளன. அந்த வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    வீடியோ முழுவதும் கேலி பேச்சுகள், அரசியல் விவாதங்கள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி இந்திய மக்களால் தோற்கடிக்கப்படுகிறது என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே பீகாரில் நவராத்திரி விழாவின் போது மீன் சாப்பிடுவது போன்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் தேஜஸ்வி யாதவ், இந்த வீடியோ நவராத்திரிக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் பகிர்ந்துள்ள இந்த புதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.


    • மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல.
    • பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, வெப்ப அலையை தாங்க முடியாமல் அவர் தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்ட வீடியோ வைரலானது.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "ஜூன் 4க்குப் பிறகு குட்பை பாஜக , குட்பை நரேந்திர மோடி. பாஜகவின் ஆட்சி ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடையும். பாஜகவிற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது.

    மோடி கூறியது போல, அவர் மற்றவர்களை போல உயிரியல் சார்ந்த பிறப்பல்ல. கடவுளால் உருபெற்றவர் தான் என்றால், அவர் உருபெற்றது உழைக்கும் மக்களுக்காகவோ, உழவர்களுக்காகவோ அல்ல. அம்பானி - அதானிக்காக மட்டுமே.

    தேர்தலுக்கு பின்பு ஊழல் தொடர்பாக மோடியிடம் அமலாக்கத்துறை விசாரித்தால் தனது செயல்களுக்கு பரமாத்மா தான் காரணம் என்று கூறி அவர் தப்பித்து விடுவார்" என்று தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம்.
    • இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மே 22 அன்று ஹரியானா மாநிலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசுவோம். இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர, ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், "ராகுல்காந்தி முதலில் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றிவிட்டு, பிறகு அக்னிபாத் திட்டம் குறித்து பேசட்டும் என்று விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

    இணை அமைச்சர் வி.கே.சிங் ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது.
    • இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 57 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சா பவாத் ஹுசைன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ராகுல் காந்தியின் பிரசார வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். 'ராகுல் காந்தி பாகிஸ்தானின் சகோதரர்' எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை விமர்சித்து இருந்தார்.

    அதைத் தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஓட்டுப் போட்ட பிறகு அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

    இந்த பதிவுக்கு பதில் அளித்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ''அமைதியும் நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்" என பதிவிட்டார்.

    இதற்கு கெஜ்ரிவால் பதில் அளிக்கும்போது, ''இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிக பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 'ராகுல் காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது ஏன்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது. அங்கிருந்து ஆதரவு குரல்கள் வருவது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.

    இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

    இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற சக்தியாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ×