search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா, கெஜ்ரிவாலுக்கு சம்மதமா?: கார்கேவுக்கு கேள்வி எழுப்பிய பூனாவாலா
    X

    மம்தா, கெஜ்ரிவாலுக்கு சம்மதமா?: கார்கேவுக்கு கேள்வி எழுப்பிய பூனாவாலா

    • ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் கார்கே.
    • அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா என பூனாவாலா கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடித்தால் நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகாரர்ஜூன கார்கே தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம். அவர் இளைஞர்களையும், நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்றார்.

    இந்நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மல்லிகார்ஜுன கார்கே (இந்தியா கூட்டணியின் பிரதமர் முகத்திற்கு) விருப்பம் எதுவாக இருந்தாலும், அது பொதுமக்களின் விருப்பமா என்பதுதான் கேள்வி?

    காங்கிரசுக்கோ அல்லது இந்தியா கூட்டணிக்கோ ஆட்சிக்கு வருவதற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்கப் போவதில்லை.

    ஆனால் மல்லிகார்ஜுன கார்கே தனது விருப்பத்தை கூறியுள்ளார். அவர் மம்தா பானர்ஜி அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலைக் கேட்டாரா?

    இந்தியா கூட்டணி கடைசிக் கட்டத்தில் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளப் போவதில்லை. டெல்லியில் நட்பைக் கடைப்பிடித்தவர்கள் பஞ்சாபில் எதிரிகளாக மாறுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×