search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavoorchatram"

    • பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது.
    • கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் அவதி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    வேகத்தடை

    பாவூர்சத்திரம் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடம் அருகே பஸ் வந்த போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது.

    அப்போது பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வேகத்தடையில் பட்டு சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வழியே பயணிகள் ஏறவோ, இறங்கவோ முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் ஆலங்குளம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மாற்று பஸ்கள் இல்லாததால் வெகு நேரம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தின் முன்பு காத்திருந்தனர்.

    இதில் பெண்கள் மற்றும் கை குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் கொசு தொல்லையால் மிகவும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். இது குறித்து தென்காசி பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 1½மணி நேரத்திற்கு பின்னர் வந்த மாற்று பஸ் ஆனது பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை நோக்கி சென்றது.

    சமீப காலமாக அரசு பஸ்களில் ஏற்படும் பழுதுகளை முறையாக சரிசெய்யாமலும், பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமலும் சம்பந்தப்பட்ட பணிமனை ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    நெல்லை- தென்காசி இடையே இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் மேற்கூரைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் இயக்கப்பட்டு வருவதாகவும் மழை காலங்களில் பஸ் முழுவதும் தண்ணீர் ஒழுகுவதால் குடையுடனையே பயணிகள் பயணம் செய்யும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

    • முருகனும் அவரது மனைவி வள்ளி செல்வமும் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • நிலை தடுமாறி கீழே விழுந்த வள்ளிசெல்வம் படுகாயம் அடைந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி செல்வம் (வயது 52).

    இவர்கள் இருவரும் கடந்த 16-ந்தேதி பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே நெல்லை- தென்காசி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சாலையின் குறுக்கே முயல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது பின்னால் அமர்ந்திருந்த வள்ளிசெல்வம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வள்ளி செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 வயது சிறுமி தனியாக இருப்பதை அமல்ராஜ் பார்த்துள்ளார்.
    • அமல்ராஜ், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டார்.

    ஆலங்குளம், மே.22-

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி மாயாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து. இவரது மகன் அமல்ராஜ்(வயது 48). இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டில் 16 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை அறிந்த அமல்ராஜ், சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டார்.

    உடனே அமல்ராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அமல்ராஜை கைது செய்தனர்.

    • மாணிக்க வாசகம் டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாபநாச பெருமாள் இறந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாபநாச பெருமாள். இவரது மகன் மாணிக்க வாசகம் (வயது 21). பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பாவூர் சத்திரத்தில் உள்ள டீக்கடை யில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது தந்தை பாபநாச பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மாணிக்கவாசகம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவிரக்தியில் இருந்து வந்த மாணிக்க வாசகம் நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சாலை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
    • 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரில் இருந்து மருதடியூர்,சாலடியூர், மகிழ்வண்ணநாதபுரம் வரை செல்லும் சாலையானது மேடு பள்ளமாக காட்சியளித்து வருகிறது. இச்சாலை யானது அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறை வடைந்த நிலையில் சாலையின் ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது.

    சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாவூர்சத்திரம் சந்தைக்கு தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள், விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் அதிகளவில் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

    எனவே சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு ராம்குமார் என்னும் இளைஞர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
    • ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென சுப்பிரமணியம் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் செந்தூர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள சிவசுப்பிர மணியபுரம் பகுதியில் போலியாக பட்டா மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரமேஷ், முருகன் மற்றும் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் உள்ளிட்டோர் செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கூறி மாவட்ட வருவாய் அலுவல ருக்கு புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் தென்காசி ஆர்.டி.ஓ. கெங்காதேவி மற்றும் வருவாய் அலுவலர் நேரில் விசாரணை மேற்கொள் வதற்காக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவல கத்திற்கு வந்திருந்தனர். அப்போது நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவராக இருந்து வரும் பொடியனூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் என்பவர் ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    அங்கு அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக பேசியதோடு, சமூக ஆர்வலர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனை கண்டித்த ஆர்.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் ஆகியோர் சுப்பிரமணியனை வெளி யேற்றினர்.

    தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர் செந்தூர் பாண்டியனுடன் சேர்ந்து நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொ ள்ளப்படும் என ஆர்.டி.ஓ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தீயில் எரிந்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.
    • தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி சாலை பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலையில் ராஜன் குடோனை அடைத்து விட்டு வெளியில் சென்று இருந்த நேரத்தில் திடீரென குடோனில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.

    தொடர்ந்து குடோனின் உள்பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த 11 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறியது.

    இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். சம்பவட இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயில் கருகி கிடந்த வாகனங்களை தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அனைத்தனர். தீ விபத்தில் சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எறிந்து நாசமானது தெரியவந்தது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனிகா தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • மனமுடைந்த கனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்திரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த வர் திருமலைகுமார். இவரது மனைவி சந்தனமாரி. இவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கனிகா(வயது 20).

    தற்கொலை

    இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கனிகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொ ண்டே இருந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார், கனிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் ஓட்டுனர்களுக்கு தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான ரஹீம், நிர்வாகிகள் கல்யாணி, மணிக ண்டன், சரவணன், மேரி, ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி, துணைத் தலைவா் ராஜேந்திரராவ், செயலாளா் கிருஷ்ணன், துணைச் செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமர், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னு லிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை-தாம்பரம் தாமிரபரணி அதிவிரைவு ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    பாவூர்சத்திரம்

    செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருகபக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.

    மேலும் ரெயில் பயணிகள் கோரிக்கையாக இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் எனவும் பாவூர்சத்தி ரம் ரெயில் நிலையத்திற்கு பேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கடையம் ெரயில் நிலையத்திற்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது .

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    வீ. கே. புதூர்:

    பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

    முன்னாள் பாளை மறை மாவட்ட  ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடர்ந்து வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெப மாலையும், நவநாட்திருப்பலி, மறையுரை,  நற்கருணை ஆசீர் நடக்கிறது. 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியார் திருவுருவ பவனி நடைபெறுகிறது.

    திருவிழா நிறைவு தினமான திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு ஆராதனையையும், திருவிழா கூட்டு திருப்பலியையும்  நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜேம்ஸ், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    பாவூர்சத்திரம் அருகே திருட்டு வழக்கில் பெயிண்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    வீ. கே.புதூர்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை  நடத்தி வந்தனர். 

    மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின்  உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது மடத்தூர் சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த தவளை என்கிற ஆனந்த் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில்  அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து திருடிய பணம் மற்றும் திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஆனந்த் பெயிண்டர் மற்றும் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    பாவூர்சத்திரம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீ.கே.புதூர்:

    தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவரது மகன் விக்னேஷ் பாண்டியன் (வயது 28). கூலி தொழிலாளி. இவரும் தென்காசி  திரவியம் நகரை சேர்ந்த மெக்கானிக்கான விக்னேஷ் என்பவரும் நண்பர்கள்.

    விக்னேஷ் பாண்டியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று இவர்கள் 2 பேரும் அந்த நாய்க்குட்டியை பாவூர்சத்திரத்தில் தனது நண்பர் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். விக்னேஷ்  மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    பாவூர்சத்திரம்  ராமச்சந்திரபட்டினம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நாய்க்குட்டி துள்ளி சாலையில் குதித்துள்ளது. உடனே விக்னேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். பின்னால் அமர்ந்திருந்த விக்னேஷ் பாண்டியன் சாலையை கடந்து நாய்க்குட்டியை தூக்குவதற்கு சென்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் பாண்டியன் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் விக்னேஷ் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×