search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் செங்கோட்டை- தாம்பரம் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு
    X

    செங்கோட்டை-தாம்பரம் வாராந்திர ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தில் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.

    பாவூர்சத்திரத்தில் செங்கோட்டை- தாம்பரம் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு

    • செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயில் ஓட்டுனர்களுக்கு தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கியது. செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி. கலந்து கொண்டு ரெயில் டிரைவர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும், வர்த்தக சங்க தலைவருமான ரஹீம், நிர்வாகிகள் கல்யாணி, மணிக ண்டன், சரவணன், மேரி, ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவா் முரளி, துணைத் தலைவா் ராஜேந்திரராவ், செயலாளா் கிருஷ்ணன், துணைச் செயலாளா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா் சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலா் ராமர், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னு லிங்கம், வேம்புராஜ், செண்பகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செங்கோட்டை-தாம்பரம் தாமிரபரணி அதிவிரைவு ரெயில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை களில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    பாவூர்சத்திரம்

    செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட இந்த ரெயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரெயில் ஓட்டுனர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி. கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்வி போஸ், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, வணிகர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ரெயிலுக்கு கடையம் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருகபக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.

    மேலும் ரெயில் பயணிகள் கோரிக்கையாக இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்ட வேண்டும் எனவும் பாவூர்சத்தி ரம் ரெயில் நிலையத்திற்கு பேன் வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் கடையம் ெரயில் நிலையத்திற்கு நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது .

    Next Story
    ×