search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே ஆர்.டி.ஒ. முன்பு தாக்குதலில் ஈடுபட முயன்ற தி.மு.க. நிர்வாகி
    X

    தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியன்.

    பாவூர்சத்திரம் அருகே ஆர்.டி.ஒ. முன்பு தாக்குதலில் ஈடுபட முயன்ற தி.மு.க. நிர்வாகி

    • செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
    • ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென சுப்பிரமணியம் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் செந்தூர் பாண்டியன். இவர் அதே பகுதியில் உள்ள சிவசுப்பிர மணியபுரம் பகுதியில் போலியாக பட்டா மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆவுடையானூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரமேஷ், முருகன் மற்றும் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் உள்ளிட்டோர் செந்தூர்பாண்டியனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கூறி மாவட்ட வருவாய் அலுவல ருக்கு புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் தென்காசி ஆர்.டி.ஓ. கெங்காதேவி மற்றும் வருவாய் அலுவலர் நேரில் விசாரணை மேற்கொள் வதற்காக ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவல கத்திற்கு வந்திருந்தனர். அப்போது நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவராக இருந்து வரும் பொடியனூர் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் என்பவர் ஆர்.டி.ஓ. விசாரணையின்போது திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

    அங்கு அவர் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக பேசியதோடு, சமூக ஆர்வலர்களையும் தாக்க முற்பட்டுள்ளார். இதனை கண்டித்த ஆர்.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் ஆகியோர் சுப்பிரமணியனை வெளி யேற்றினர்.

    தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியன் கிராம நிர்வாக அலுவலர் செந்தூர் பாண்டியனுடன் சேர்ந்து நாகல்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொ ள்ளப்படும் என ஆர்.டி.ஓ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×