search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Kadambur Raju"

    அரசியலை புரிந்து கொள்ளாமல் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #MinisterKadamburRaju
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரமாண்டமான கோட்டை வடிவிலான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    தொழில்துறை தொடர்பாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியலை புரிந்து கொள்ளாமல், எந்த கருத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பிறகு தான் உலக தொழிலாளர்கள் மாநாட்டை முதன் முதலாக நடத்திக் காட்டினார். தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை. தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சராக ஆகிவிடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். அது நிராசையாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏதாவது பிளவு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வராதா? என அவர் கனவு காண்கிறார். மக்கள் பணிகளை செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அவர் கூறவும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் இல்லை.

    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நடந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. அவருடைய வழியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை போல் வருகிற தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MinisterKadamburRaju
    கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். #KadamburRaju #KarunanidhiMemorial
    தூத்துக்குடி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-



    ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.

    எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.  #KadamburRaju #KarunanidhiMemorial
    தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய அமைச்சர் கடம்பூர் ராஜு கருணாநிதிக்க்கு அண்ணா சமாதி அருகே இடம் கொடுத்தது அதிமுக அளித்த பிச்சை என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். #Karunanidhi #MinisterKadamburRaju #DMK #ADMK
    தூத்துக்குடி:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து இருந்தது. அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.



    மேலும், 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும் எனவும், ஆனால் தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என தெரிவித்துள்ளார்.

    மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும், சரி எங்கேயாவது வைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தாம் கையெழுத்து போட்டதாகவும், பிறகு முதல்வரும் கையெழுத்து போட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

    அமைச்சர் கடம்பூர் ராஜுவின் இந்த கருத்து திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #Karunanidhi #MinisterKadamburRaju #DMK #ADMK
    அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார். #ThangaTamilselvan #TNMinister #KadamburRaju
    தேனி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.வில் இணைய தூதுவிடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து இருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர், இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றால் அ.தி.மு.க. கட்சியையும், சின்னத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு பொறுப்பாளர்கள் விலகி கொள்ள வேண்டும். அ.ம.மு.க. தோற்றால் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விடுகிறோம் என்று சவால் விட்டேன்.


    இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ குழம்பி போய் நான் அ.தி.மு.க.வில் இணைய தூது விடுவதாக கூறுகிறார். அ.தி.மு.க. என்பது மொட்டை கிணறு. மொட்டைக்கிணறு என தெரிந்தே அதில் விழுந்தால் இறந்து விடுவோம். அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம்.

    அ.தி.மு.க.வில் யாருக்கும் தலைமை பண்பு கிடையாது. அதனால் கட்சியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் பேச்சை யாரும் கேட்பது இல்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவர்களது இஷ்டத்துக்கு உளறி வருகிறார்கள்.

    ஆந்திராவில் பெட்ரோல்- டீசல் விலையில் ரூ. 2 குறைத்தது போல் தமிழகத்திலும் குறைக்க வேண்டும். மத்திய அரசிடம் வலியுறுத்தி விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தமிழக அரசுக்கு துணிச்சல் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #TNMinister #KadamburRaju
    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    கோவில்பட்டி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    எல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது.

    நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.

    தமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை.

    காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின் உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #TNMinister #KadamburRaju #CentralGovt
    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதிமாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 15ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, தலைமை கழக பேச்சாளர் சுப்பையா பாண்டியன், நெல்லை எல்.கபாலி மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

    வருகிற 16-ந்தேதி காயல்பட்டினத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர் நெல்லை சடகோபன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். 17-ந்தேதி கோவில்பட்டியில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், தலைமை கழக பேச்சாளர் ராமசுப்பிரமணியன், சிவாஜி சின்னப்பன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    எனவே இந்த கூட்டங்களுக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய பகுதி நகர பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அரசு மானியம் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய கல்வி மனைகளின் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்ட கண்காணிப்பாளர் திபு முன்னிலை வகித்தார். விழாவிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் ஜெயதாஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    அமைச்சர் கடம்பூர் ராஜூ பள்ளியில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:-

    கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. உள்ளது. அரசு மானியத்துடன் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு அனுமதி அளித்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்கள் வேளாங்கன்னி செல்வதற்கு தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் பேருந்தை திருச்செந்தூரிலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு விடுதியில் தங்கி பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரசு சார்பில் 300 பேருக்கு ஆயிரம் கிலோவிற்கு மேல் அரிசி மற்றும் கோதுமை உணவு பொருளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வழங்கிவிட்டு இந்த ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள இங்கு வந்தேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான்வர்க்கீஸ் வரவேற்றார். பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பலர் எதிர்த்தனர். பின்னர் அதன் பலன்களை மக்கள் தெரிந்து கொண்டு நடைமுறை படுத்தினார்கள். தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அத்திட்டத்தை செயல்படுத்தியதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தது மட்டுமன்றி இந்தியா முழுவதும் அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றார்.

    இது போல் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விழிப்புணர்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் தங்களுக்கு பாடங்கள் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #MGR #TNMinister #KadamburRaju
    சென்னை:

    விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் முன்னிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டனர்.

    நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.

    வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் எங்களுக்கு பாடங்கள்.


    அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித்தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான்.

    “எழுமின்” திரைப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய வி.பி.விஜி பேசும்போது, “எழுமின் திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    நடிகர் விவேக் பேசுகையில், “தமிழ்நாட்டில் சமீபமாக பல ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்திவென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்’’ என்றார்.

    விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும் மாணவர்களுக்காக பிரமாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. #MGR #TNMinister #KadamburRaju
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். #thoothukudisterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் 10 ஆண்டு களுக்கு பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைமடை வரை குறுவை சாகுபடிக்கு தண்ணீர் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 10-வது தாலுகாவாக ஏரல் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது. மீண்டும் ஆலையை திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது. அங்கு நிர்வாக ரீதியான பணியை செய்து கொள்ளலாம் என்றுதான் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

    நிர்வாக ரீதியான பணியை மேற்கொள்ள அனுமதி அளித்து இருப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் தருவதற்கு சட்ட சிக்கல் இருந்து வந்தது. இதனை சுட்டிக்காட்டிய போது, ஒரு மணி நேரத்தில் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சட்டசிக்கலை உருவாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். 

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார். #thoothukudisterlite
    “ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விமர்சனம் செய்யும் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார்” என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வதுடன், இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறுகிறார். எந்த சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டவுடன் பதவி விலக வேண்டும் என்று கூறப்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தன்னை அதிமேதாவியாக கருதுகிறார். அவர் அரசியலுக்கே லாயக்கற்றவர். ஒருவர் மீது யார்  வேண்டுமானாலும் குற்றச்சாட்டு கூறலாம். அது நிரூபணமானால்தான் குற்றவாளியாக கருத முடியும். சட்டமன்ற கூட்டத்தொடர் 46 நாட்கள் நடந்தபோதும்கூட தமிழக அரசின் மீது யாரும் எந்தவித குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை.

    பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காகவும், விலைவாசி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு பஸ்களில் விவசாயிகள் கட்டணமின்றி விளைபொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. பசுமை பண்ணை காய்கறி அங்காடிகளில் கூடுதலாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MinisterKadamburRaju
    தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #KadamburRaju #Theaters
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து அரசு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

    விரைவில் நடைபெறவுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் சங்கங்களை இணைத்து நடத்தும் 2-வது கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பு கொண்டு வந்தது 4 ஆண்டுகாலம் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திரா அரசு தான். சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தங்களின் மாநிலம் சார்ந்த கோரிக்கையை முன் வைத்து கொண்டு வந்ததை ஆதரிக்க முடியாது. அவர்கள் இந்தியாவிற்கான பிரச்சனையை முன் வைத்து கொண்டு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #KadamburRaju #Theaters
    ×