search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான்வர்க்கீஸ் வரவேற்றார். பேரணியை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பலர் எதிர்த்தனர். பின்னர் அதன் பலன்களை மக்கள் தெரிந்து கொண்டு நடைமுறை படுத்தினார்கள். தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அத்திட்டத்தை செயல்படுத்தியதற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தது மட்டுமன்றி இந்தியா முழுவதும் அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்றார்.

    இது போல் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விழிப்புணர்வு நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சின்னத்துரை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×