என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parking charge"

    • ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை, அண்ணாநகர், நுங்கம்பாக்கம் உள்பட 10 இடங்களில் வாகன நிறுத்தம் உள்ளது. இங்கு தனியார் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

    அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக நிறுவனம் சார்பில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 1 மணி நேரத்துக்கு இரு சக்கரவாகனங்களுக்கு 5 ரூபாய், 4 சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், பஸ்-வேன்களுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதற்கான ரசீதில் வாகனத்தின் பதிவு எண், பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக ரசீதின் உண்மை தன்மையை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பாக 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #KadamburRaju #Theaters
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது குறித்து அரசு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

    விரைவில் நடைபெறவுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர் சங்கங்களை இணைத்து நடத்தும் 2-வது கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பு கொண்டு வந்தது 4 ஆண்டுகாலம் பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திரா அரசு தான். சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று தங்களின் மாநிலம் சார்ந்த கோரிக்கையை முன் வைத்து கொண்டு வந்ததை ஆதரிக்க முடியாது. அவர்கள் இந்தியாவிற்கான பிரச்சனையை முன் வைத்து கொண்டு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #KadamburRaju #Theaters
    ×