search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lessons"

    • இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
    • அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமீபத்தில் நடந்த காலாண்டு தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை இயக்குனரகத்தில் இருந்து ஒருங்கிணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி தேர்ச்சி சதவீதம் குறைந்த பாடங்கள், பள்ளிகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதுசார்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி வாரியாக குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தால், அதற்கான காரணத்தை உரிய ஆசிரியரே குறிப்பிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான தீர்வையும், அந்த ஆசிரியரே தெரிவிக்க வேண்டும். அடுத்த தேர்வில் இப்பாடத்தில் மாணவர்களின் நிலை எப்படி என ஆய்வு செய்வதோடு ஒப்பீடு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்தனர்.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2065 பள்ளிகள் திறக்கப்பட்டது.‌ இன்று முதல் 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கியது.

    ஒரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிக்கு மாணவ-மாணவிகள் காலையிலேயே ஆர்வத்து டன் வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை சந்தித்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளிகள் திறக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்தை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகள் திறப்பு மற்றும் முடியும் நேரம் சிறிது மாறுபட்டது.

    பள்ளிகள் தொடங்கி யதும் மாணவ- மாணவி களுக்கு இலவச பாடப், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதனை அவர்கள் ஆர்வத்துடன் வாங்கி படித்துப் பார்த்தனர். வகுப்பு தொடங்க ப்பட்டதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுக்கவில்லை. மாறாக அரசு வழிகாட்டுதல் படி மாணவ- மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நல்லொழுக்கம் மற்றும் உளவியல்ரீதியான வகுப்புகளும் நடத்தப்ப ட்டன.

    இந்த வாரம் முழுவதும் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.அடுத்த வாரம் முதல் வழக்கமான பாடங்கள் நடத்தப்பட உள்ளன.இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தஞ்சையில் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகள் பரபரப்பாக இயங்கின. வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும், 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். இவரது வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது.
    சென்னை:

    பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர் பெருக்கம் என்ற பாட தொகுப்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை பற்றிய தொகுப்புக்கு கீழே நெல் ஜெயராமனை பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதில், ‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதிரங்கம் கிராமத்தை சேர்ந்தவர். நம்மாழ்வாரின் சீடராவார். இவர் நமது நெல்லை பாதுகாப்போம் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்துக்கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

    சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதையும், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார்’ என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
    முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் தங்களுக்கு பாடங்கள் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #MGR #TNMinister #KadamburRaju
    சென்னை:

    விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் முன்னிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டனர்.

    நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.

    வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் எங்களுக்கு பாடங்கள்.


    அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித்தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான்.

    “எழுமின்” திரைப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய வி.பி.விஜி பேசும்போது, “எழுமின் திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    நடிகர் விவேக் பேசுகையில், “தமிழ்நாட்டில் சமீபமாக பல ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்திவென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்’’ என்றார்.

    விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும் மாணவர்களுக்காக பிரமாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. #MGR #TNMinister #KadamburRaju
    1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வரவேற்றார். கலையரங்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது:-

    1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த கோடு மூலமாக செல்போனில் பாடத்தை தெரிந்து கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கற்றுத்தர இந்த அரசு முனைப்புடன் செயல்பட உள்ளது. புதிய சீருடைகள் மாற்றி அமைத்ததன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.

    1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கல்வியாளர்கள் உழைத்து இந்த புதிய புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வி துறை மாறும் என்பதில் ஐயமில்லை. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது. இந்தியாவிலேயே எவரும் பெற முடியாத மடி கணினி திட்டத்தையும், இலவச சைக்கிள் வழங்கும் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். அவரது ஆசியோடு இந்த அரசு நடக்கிறது.

    1,6,9,11-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வரும் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். ஆசிரியர்களின் உழைப்பால்தான் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும். எல்லா பெற்றோருக்கும் தனது மகன், மகள் தனியார் பள்ளிகளை போல ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர்களது கனவை நனவாக்க தமிழகத்தில் கல்வி துறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் தனது மகன், மகளை சேர்த்து பின்னர் பணம் கட்ட முடியாமல் மீண்டும் அரசு பள்ளிகளுக்கு வந்து சேர்க்கும் நிலையானது உருவாகும்.


    நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற எங்களது முடிவில் மாற்றம் இல்லை. மத்திய அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வுக்காக 3486 மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரம் பேர் மருத்துவர்களாகும் வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. கட்டாய கல்வி சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் விளக்கப்படும்’’ என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×