என் மலர்

  நீங்கள் தேடியது "Karunanidhi Memorial"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
  • வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

  சென்னை:

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது

  கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

  கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது

  கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது

  சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

  வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  சுரண்டை:

  சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

  தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.மொத்தம் 48 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  இதில் சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன் சங்கர நயினார், குறுங் காவனம் வெள்ளத்துரை பாண்டியன், வைகை கணேசன்,சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், கூட்டுறவு கணேசன்,ராஜன்,எழில், சுதன்,மாரிச்செல்வி, ஜோதிடர் இசக்கி மோகன்மகேந்திரன்மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
  சென்னை:

  நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

  கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.

  அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்றனர். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தலில் வென்ற எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேரணியாக சென்று தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
  சென்னை:

  சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது.

  இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு பேரணியாக சென்றார்.  அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற ஸ்டாலின் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  ஸ்டாலின் வருகையை கேள்விப்பட்டு அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் வெற்றி கோஷங்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
  சென்னை:

  தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

  நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.  இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

  அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார் என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
  சென்னை:

  சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கருணாநிதி சாதாரண அரசியல்வாதி அல்ல. தமிழ் மக்களின் உண்மையான குரலாக கருணாநிதி வாழ்ந்தார்.

  தனது வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி எளிமையையும், அகங்காரம் இல்லாத குணத்தையும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது சந்திப்பு எனக்கு உந்துதலாக இருந்தது.  கோடானு கோடி மக்களின் குரலை கேட்காத அரசாங்கமாக தற்போதைய பாஜக அரசு உள்ளது. இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசை விடக்கூடாது. நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

  நான் இந்த விழாவில் பேசியதை கவுரமாக கருதுகிறேன். நான் கருணாநிதியை பற்றி பேசும்போது தமிழகத்தின் பெருமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பேசுவதாக நினைக்கிறேன். நாட்டு ஒற்றுமையை பலப்படுத்துவேன், நன்றி என தெரிவித்தார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது என புகழாரம் சூட்டினார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
  சென்னை:

  சென்னை அண்ணாஅறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவை தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

  இந்த கூட்டத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் பேசுகையில், தமிழ் வளர்ச்சிக்காக கருணாநிதி ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றது. கருணாநிதி தான் ஆற்றிய அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்.

  சமூக வளர்ச்சியுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்றவர் கருணாநிதி. பெண்கள் முன்னேற்றத்திற்கு கருணாநிதி ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இங்குதான் திருநங்கையருக்கென வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். #Karunanidhi #SoniaGandhi #RahulGandhi #Stalin #PinarayiVijayan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
  சென்னை:

  மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், தலைவர் ராகுல் காந்தியும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் சென்னை வந்தனர்.

  இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி விழாவில் பங்கேற்று கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அண்ணா சிலையும் திறக்கப்பட்டது.  சிலை திறப்பு விழா முடிந்ததும் சோனியாவும், ராகுலும் மெரினா கடற்கரை சென்றனர். அங்குள்ள அண்ணா சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர். 

  அவர்களுடன் வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர். பாலு எம்.பி, கனிமொழி எம்.பி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiMemorial #SoniaGandhi #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். #KadamburRaju #KarunanidhiMemorial
  தூத்துக்குடி:

  தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது,  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார். கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்தது அதிமுக போட்ட பிச்சை என்றும் கூறினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இதுபற்றி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-  ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டப்பட உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நினைவிடத்தை இடிப்போம் என்று திமுக பொதுக்கூட்டத்தில் பேசினர். அது மிகவும் கடுமையான வார்த்தை. அதனால் கருணாநிதி நினைவிடம் பற்றி அந்த கருத்தை சொன்னோம்.

  எங்கள் அம்மாவை பற்றி சொன்னால் நிச்சயம் பதிலடி தருவோம். நினைவிடத்தை இடிப்போம் என்று கூறியது கடுமையான வார்த்தை இல்லையா? மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மாவின் நினைவிடத்தை இடிப்போம் என்று சொன்னால் இதைவிட கடுமையான வார்த்தையை சொல்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  தமிழிசையிடம் கேள்வி கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, எல்லோருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை உண்டு, ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டிருந்தால் கண்டிக்கத்தக்கது என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.  #KadamburRaju #KarunanidhiMemorial
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடந்த அமைதிப் பேரணியின் முடிவில், கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
  சென்னை:

  தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.  திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து காலை 11.25 மணியளவில் மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டர். இவர்களில் பெரும்பாலானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

  அமைதியாக நடைபெற்ற இந்த பேரணி 12.40 மணியளவில் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.அழகிரியின் அமைதி பேரணி நடைபெற்ற சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். #Karunanidhi #Alagiri #DMK
  சென்னை:

  மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அவரது மகன் மு.க.அழகிரி இன்று (புதன்கிழமை) தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி நடத்த இருக்கிறார். இந்த பேரணிக்கு சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

  தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.  கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, “எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாக கூறினார்.

  இந்தநிலையில், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

  பேரணி இன்று நடைபெறும் நிலையில், முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் அதற்கு அனுமதி அளித்துவிட்டனர்.

  திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்குகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர்.

  இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

  மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் வாகனங்களும் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற தகவலும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Karunanidhi #Alagiri #DMK 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print