சுரண்டை கருணாநிதி நினைவாலயத்தில் செஸ் போட்டி-சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்,ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
போட்டியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன்,ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
Published on

சுரண்டை:

சுரண்டையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் தினமும் நிகழ்ச்சி நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர்.மொத்தம் 48 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த போட்டியாளர்களாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சுப்பிரமணியன், பூல் பாண்டியன் சங்கர நயினார், குறுங் காவனம் வெள்ளத்துரை பாண்டியன், வைகை கணேசன்,சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், கூட்டுறவு கணேசன்,ராஜன்,எழில், சுதன்,மாரிச்செல்வி, ஜோதிடர் இசக்கி மோகன்மகேந்திரன்மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com