search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka"

    • தனிப்படை போலீசார் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக நகர போலீஸ் கமிஷனர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமிஷனர் பிரபாகரன் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை ஒதுக்கி வைத்திருப்பவ ர்களை கண்டறிய ஒரு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை யடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனிலிருந்து 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போதை பொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த வெங்கடேசன், ஈரோடு பகுதியைச் சார்ந்த தளராம் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்க்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பதை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது
    • பாவூர்சத்திரம் போலீசார் ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திப்பணம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் (39) மற்றும் வடக்கு கொண்டலூர் செங்கநாடானூர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (27) ஆகிய இருவரும் தனித்தனியே மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது.

    அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரம் மதிப்பு கொண்ட 105 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி சேரன் நகரைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் பாலாஜி(28) என்பதும், கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது. அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது.

    அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் சந்தேகம் பஸ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.

    போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக வெளியூரில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்தனர்.
    • இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.

    அதைத் தொடர்ந்து துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து சேலத்தில் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல் அறிந்து தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்கா ராம்ஜி மகன் கீமா ராம் (வயது 28), தாபா ராம் மகன் ராஜேஷ் குமார் (25), ராஜாராம் மகன் ஜலராம் (38) ஆகிய 3 பேரையும் நேற்று பெங்களூருவில் வைத்து தனிப்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் சேலம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைது செய்யப்படும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தாயரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை களின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 234 கடைகளுக்கு ரூ.11.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளில் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டால், அவர்கள் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கை பாயும். கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

    • போலீசார் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்களில் சில்லறை கடைகளுக்கு அதிக அளவில் குட்கா விற்பனை செய்வதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    90 கிலோ

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் மேல கடையநல்லூர் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த கார்- மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த பொழுது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த 90 கிலோ ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    3 பேர் கைது

    இதனைத் தொடர்ந்து காரில் இருந்த தென்காசி ஐந்து வர்ணம் பெரிய தெருவை சேர்ந்த நாகூர் மீரான் (29), மேல கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனியைச் சேர்ந்த வைரமுத்து (39), தென்காசி புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்த நூரி அமீன் (40) ஆகிய 3 பேரையும் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    • பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    கோவை:

    கோவையில் போலீசார் வாகன தணிக்கை மற்றும் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது கடைகளில் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தால் அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சத்தி மெயின் ரோடு ஆம்னி பஸ் நிறுத்தம் அருகே ரத்தினபுரி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில், குட்காவை விற்பனை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் குட்கா வியாபாரிகளான கணபதி லட்சுமி நகரை சேர்ந்த சந்திரசேகர்(44), பிரதீப்குமார்(21), அழகுபாண்டி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான 190 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல், பாப்பநாயக் கன்பாளையம் காய்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை அருகே சிலர் குட்காவை பதுக்கி விற்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 350 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் குட்கா விற்றதாக வியாபாரிகளான கோவை பாப்ப நாயக்கன்பாளையம் அசோகர் வீதியை சேர்ந்த கவுதம் (21) மற்றும் அண்ணாதுரை (50) ஆகிய 2 பேரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,400-யை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முள்ளு–குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது34). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக பேளுகுறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • அரகண்டநல்லூர் அருகே ஆட்டோவில் குட்கா கடத்தியவர் கைதுசெய்யப்பட்டார்.
    • ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ்.

    விழுப்புரம்:

    அரகண்டநல்லூர்அருகே மணம்பூண்டி பி.டி.ஓ., அலுவலகம் அருகே டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 4 மூட்டைகளில் 2,100 குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.விசாரணை யில் ஆட்டோ ஓட்டி வந்தவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், 42; எனவும் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. உடனே ஆட்டோ, குட்கா மூட்டைகளை கைப்பற்றி, ரமேஷை கைது செய்தனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 10 கிலோ குட்கா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் (வயது 45 ). இவர் பல்லடம்- உடுமலை சாலையில் உள்ள கேத்தனூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சென்று சோதனை செய்ததில் 10 கிலோ குட்கா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக கணேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 கிலோ குட்காவை கோப்புபடம். செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×