search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூர்"

    • காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம்
    • ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்

    சூலூர்,

    சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலிவேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

    இதற்கிடையே காதலி கர்ப்பமானது தெரியவந்ததும் அந்த வாலிபர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு தப்பி சென்று விட்டார். இதுதொடர்பாக சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பி சென்றது ஓம்பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைதுசெய்து கோவைக்கு அழைத்து வந்து, சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

    • பொருட்கள் எரிந்து நாசமானது
    • கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

    சூலூர்,

    சூலூர் அருகே புதிய பஸ் நிலையம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் நல்லுசாமி (வயது 68) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நல்லுசாமி கூட்டுறவுத் துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    நேற்று முதல் மாடியில் வீட்டின் படுக்கை அறையில் ஏசி எந்திரத்தை இயக்கி விட்டு விட்டு கீழே உள்ள வரவேற்பறையில் தனது உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேல் மாடியில் படுக்கை அறையில் இருந்து புகை வருவதை கண்டார்.

    உடனே சத்தமிட்டு அருகில் இருப்போரை அழைத்தார். அப்போது தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. உடன டியாக மின்சாரத்தை துண்டித்து இது பற்றி சூலூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சூலூர் தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக படுக்கை அறை க்குள் சென்று அங்கு பற்றி இருந்த தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் மாட்டி இருந்த ஏசி மெஷினில் தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அதில் இருந்து தீ பரவி அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்துள்ளது. தெரிய வந்தது. தீப்பற்றும் போது அந்த அறையில் நல்லுசாமி மற்றும் அவரது மனைவி இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    • கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி. வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து வந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டார்.

    உடல் மீட்பு

    பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டனர்.

    அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த வாலிபர் சிவப்பு கலரில் டீசர்ட், கருப்பு கலரில் பேண்ட் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    பின்னர் போலீசார் அந்த வாலிபர் யார் என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் என்று தெரிய வில்லை.

    இதனை தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையா?

    இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது மதிக்க தக்க வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அவரை யாராவது கொலை செய்து பி.ஏ.பி. வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 17-ந் தேதி ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார்.
    • நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை

    கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் ஸ்ரீ சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் லேத் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 17-ந் தேதி ரமேஷ் தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 1¾ பவுன் தங்க நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பி ரமேஷ் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேத் ஒர்க்ஷாப் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    • சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போலீசார் பற்றிய சரியான புரிந்துணர்வு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாணவிகளையும் சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட்டது. சூலூர் இன்ஸ்மாபெக்டர் தையன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் காவல் துறை அனைவரது நண்பன் என்றும், காவல்துறையை கண்டு தவறு செய்தவர்களே பயப்பட வேண்டும் என்று எடுத்துக் கூறினர்.

    மேலும் காவல்துறையில் சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

    காவல் நிலைய அலுவலக நிர்வாகம். வயர்லெஸ் கருவிகளின் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு, தொலைத்தொடர்பு கருவிகளின் உபயோகம் மற்றும் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
    • மீட்பு படையினரிடம் சிக்காமல் அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

    சூலூர்

    சூலூர் காங்கேயம் பாளையம் அருகே முருகானந்தம் என்பவர் வெங்காய வியாபாரம் செய்ய கடை வைத்து உள்ளார். இவரது கடையில் உட்கார்ந்து இருந்த போது வினோதமான ஒரு சத்தம் கேட்பதை உணர்ந்தார். அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்கும் போது அங்கு 10 அடி நீளம் கொண்ட ஒரு நல்ல பாம்பு இருந்தது.

    உடனடியாக இதுபற்றி சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை அந்த கடை முழுவதும் தேடினர். ஆனால் அந்த நல்ல பாம்பு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரிடம் சிக்காமல் அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படையினர் நல்ல பாம்பை பிடிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். மீண்டும் அங்கு பாம்பு தென்பட்டால் தங்கள் அழைக்குமாறு கூறி சென்றனர். இதனால் அக்கடை ஊழியர்கள் கடைக்குள் செல்லவே அச்சமான சூழ்நிலையில் இருந்தனர்.  

    • மோட்டார் சைக்கிளில் உரசி சென்றதால் தகராறு ஏற்பட்டது.
    • தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார்.

    அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிகேட்டனர். இதனால் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷை தாக்கினர். இதனால் கோபத்தில் இருந்த சுபாஷ் மறுநாள் தனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கி இருந்த அறைக்கு சென்றார். அங்கு தூங்கி ெகாண்டிருந்த முகுந்த ராஜேஷை அடித்து உதைத்து சென்றனர். இதில் முகுந்த ராஜேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    பின்னர் முகுந்த ராஜேஷ் தனது நண்பர்களிடம் தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அவர்கள் முகுந்த ராஜேசின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முகுந்த ராஜேஷுக்கு சிகிச்சை அளித்தனர்.

    அதன்பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து முகுந்த ராஜேசின் தந்தை ராசு கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரி ன்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகுந்தராஜேஷ் மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • பஸ் நிறுத்தத்திற்கு சேலம், ஈரோடு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வரும் பஸ்கள் வருவதில்லை.
    • பஸ்கள் கிடைக்காததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் அவதியடை கின்றனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கோவை செல்ல கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கின்றனர்.

    ஆனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு சேலம், ஈரோடு திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வரும் பஸ்கள் வருவதில்லை.

    மாறாக அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி பாலத்தின் மேலே பஸ்களை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    போக்குவரத்து நிறைந்த கோவை அவிநாசி சாலையில் இவ்வாறு முறையற்ற வகையில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் பஸ்கள் கிடைக்காததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் அவதியடை கின்றனர்.

    கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதை வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தபோவதாக அறிவி க்கப்பட்டது. இதற்கு கருமத்தம்பட்டி பாஜக மண்டல தலைவர் எஸ்.மகேஷ், மகளிர் அணி மாவட்ட தலைவி ரேவதி, மாவட்ட பொது ச்செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் போராட்டத்திற்கு காவல்து றையிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை, சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகம், கருமத்தம்பட்டி பேருந்து பணிமனை மேலாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இணைந்து அனைத்து பஸ்களும் கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். அவ்வாறு கருமத்தம்பட்டி பஸ் நிலையத்துக்கு வராத பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது போக்குவரத்து துறை மோட்டார் வாகன ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தார்.

    மேலும் அனைத்து பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் உடன் இணைந்து பாஜகவினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். போராட்டம் நடத்த அனுமதி வழங்காத போதும் தங்களது கோரிக்கை ஏற்கப்பட்டது மற்றும் செயல்படுத்தப்பட்டது குறித்து பாஜகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். காவல்துறை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பா.ஜ.கவினர் நன்றி தெரிவித்தனர்.

    • 5 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்தனர்.
    • லாரியை சோதனையிட்டபோது குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.

     சூலூர்,

    சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப ட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை யிட்டனர்.

    அப்போது லாரி டிரைவர் கீழே இறங்கி ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை துரத்தி பிடித்து விசாரித்தனர். மேலும் லாரியை சோதனை யிட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் டிரைவர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக டிராவல்ஸ் நிறுவ னத்தில் டிரைவராக பணியாற்றி உள்ளார். தற்போது பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஈஸ்வரவனை போலீசார் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர் கடத்தி வந்த 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர் அருகே பாரதிபுரத்தில் வசிப்பவர் செல்வம்.இவர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பாரதிபுரம் பகுதியில் ரகசிய சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது காரில் செல்வம் (35) குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சூலூர் அருகே தென்ன ம்பாளையம் சாலையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சூலூர் போலீசார் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அவ்வழியே வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா வை போலீசார் பிடித்தனர். விசாரணையில அவர் வாக ரையாம் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதரன் (19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 

    • ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.
    • திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    கோவை,

    கோவை கிணத்துகடவை சேர்ந்தவர் வசந்தி (வயது 36). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது சித்தி மஞ்சுளா (48) என்பவருடன் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பஸ் நிலையத்தில் விளம்பர நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது மஞ்சுளாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் கிடைக்குமா என அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். அங்கு ரோட்டோரம் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. அதனை பார்த்த அவர் அதனை எடுத்து குடித்தார்.

    பின்னர் தனது வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது. உடனே வசந்தியை அழைத்து தனக்கு உடல் நிலை முடியவில்லை என்றார்.

    அவர் மஞ்சுளாவை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் குடித்த நீரில் விஷத்தன்மை இருந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அன்னூரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (30). டிரைவர். இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    நித்தியானந்தத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கோகிலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்கு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு மறுத்தார். இதனால் நித்தியானந்தம் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கை யில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.
    • கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    சூலூர்,

    கோவை மாவட்டம் சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் கடந்த 18-ந் தேதி இரவு 2 கடைகளை உடைத்து திருட்டு நடைபெற்றது.

    இதேபோல் சுல்தான்பேட்டையில் தொடர்ச்சியாக ஆறு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது.

    அதேபோல் 17-ந் தேதி இரவு சூலூர் கலங்கல் ரோடு பகுதியில் தொடர்ச்சியாக 6 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது. கடந்த 7 நாட்களுக்கு முன்பாக மேலும் 2 கடைகளில் திருட்டு நடைபெற்று இருந்தது. இந்த கடைகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமாக கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சூலூர் சுன்தான் பேட்டை பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதற்கி டையே கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படையினர் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இதுதவிர சூலூர் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இது சம்பந்தமாக வியாபாரிகள் கூறுகையில், மளிகை கடை நடத்துபவர்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் வைத்திருப்போர் தினமும் தங்களது கடைகளில் திருட்டு நடந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறோம்.

    இது சம்பந்தமாக வியாபாரிகள் பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கடைகளின் பாதுகாப்புக்கு மற்றும் வியாபாரிகளின் பொருள்களின் பாதுகாப்புக்கும் தனியாக பாதுகாவலர்களை நியமிப்பது என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    • விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
    • இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர்

    சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் ஒட்டர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பண வரவு செலவு மற்றும் சேமிப்புகளை மேற்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது.


    நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பேச்சிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கடன் மேளாவில் 60-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த மேளாவில் 8 நபர்களுக்கு பயிர் கடனாக 8 லட்சம் ரூபாய்க்கும், மகளிர் குழு கடனாக 12 குழுக்களுக்கு ரூபாய் 15 லட்சத்துக்கும், மாற்றுத்திறனாளி கடன் தொகையாக இரண்டு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான கடன் மனுக்கள் பெறப்பட்டன. சங்கத்தின் செயலர் சகாய பவுலின் மேரி நன்றி கூறினார்.

    ×