சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் வாலிபர் பிணம் மீட்பு

கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில்  வாலிபர் பிணம் மீட்பு
Published on

கோவை,

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி. வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்து வந்தது.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டார்.

உடல் மீட்பு

பின்னர் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டனர்.

அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அந்த வாலிபர் சிவப்பு கலரில் டீசர்ட், கருப்பு கலரில் பேண்ட் அணிந்து இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

பின்னர் போலீசார் அந்த வாலிபர் யார் என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார் என்று தெரிய வில்லை.

இதனை தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 25 வயது மதிக்க தக்க வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவரை யாராவது கொலை செய்து பி.ஏ.பி. வாய்க்காலில் வீசி சென்றார்களா? அல்லது குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com