search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "kadayanallur"

  • சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.
  • உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ய தொடங்கியது. கடந்த வாரம் கருப்பாநதி அணை நிரம்பிய நிலையில் நேற்று இரவு அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடையநல்லூர் நகரில் ஓடக்கூடிய பாப்பான்கால்வாய் மற்றும் சீவலான் கால்வாய் கரையோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நேற்று இரவு நகராட்சி சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெய்த மலையால், சீவலான் கால்வாயில் நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறுகலான சிறிய பாலத்தில் அமலைச் செடிகள், மலைப் பகுதிகளில் இருந்து இழுத்துவரப்பட்ட மரத்தடிகள் ஆகியவை பாலத்தின் கீழ் நீர் செல்லும் கண்வாய்களில் அடைத்துக் கொண்டது.

  இதனால் சீவலான் கால்வாய் மேற்கு பகுதியில் கரையில் உடைப்பு ஏற்பட்டு மதீனா நகர் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமம் அடைந்துள்ளனர். உடனே நகராட்சி ஆணையாளர் சுகந்தி தலைமையிலான பணியாளர்கள் பாலத்தில் அடைப்பு ஏற்பட்ட அமலைச் செடிகளை அப்புறப்படுத்தினர்.

  ஆண்டுதோறும் மழை காலத்தில் அடைப்பு ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் பெரிய பள்ளிவாசல் அருகே நூறாண்டு பழமையான சீவலான் கால்வாய் பாலத்தை உடனடியாக அப்புறப்படுத்தி உயரமான பாலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இந்த பாலத்தில் அமலைச் செடிகள் அடைப்பதால் நீர்வழி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் செல்வதாக குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்த னர்.

  • 4 இடங்களில் தென்காசி தொகுதி எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளின் சேவை தொடக்க விழா நடந்தது.
  • தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி. ஆகியோர் மின் விளக்குகளை தொடங்கி வைத்தனர்.

  கடையநல்லூர்:

  செங்கோட்டை அருகே வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட தீ.ப.தெரு , மூனு சுழி ரோடு, வாவா நகரம் பஸ் நிறுத்தம், வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தென்காசி தொகுதி எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளின் சேவை ெதாடக்க விழா நடந்தது.

  விழாவுக்கு வடகரை பேரூராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான ஷேக்தாவூது தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் முகமது உசேன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தனுஷ் குமார் எம்.பி., முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லதுரை ஆகியோர் மின் விளக்குகளை தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினர். துணைத் தலைவர் மாலதி ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ஷெரிப், ஒன்றிய செயலாளர் திவான் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  நிகழ்ச்சியில் செயல் அலுவலர் தமிழ்மணி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரகுமான், பண்பொழி ஆய்குடி பேரூர் தலைவர்கள் ராஜராஜன், சுந்தர்ராஜன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் முருகன், மாவட்ட இளைஞர் அணி ஐவேந்திரன் தினேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • பத்திரகாளி வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்றார்.
  • சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது சி.சி.டி.வி. காட்சி ஆய்வில் தெரியவந்தது.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கட்டி விநாயகர் கோவில் தென்வடல் தெருவில் வசித்து வருபவர் திருமலைச்சாமி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்திரகாளி (வயது 50).

  இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்திருந்த 10 கிராம் எடையுள்ள மோதிரம், கைச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளை மீட்டு அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தவறி விழுந்த அந்த பையை யாரோ மர்ம நபர் எடுத்துச்சென்றனர்.

  இதுகுறித்து பத்திரகாளி உடனடியாக கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன், ஏட்டு சங்கர் ஆகியோர் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் கிடந்த பையை வயதான மூதாட்டி எடுத்துச் செல்வது தெரியவந்தது.

  உடனடியாக பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அந்த மூதாட்டியிடம் இருந்து பையை போலீசார் மீட்டு பத்திர காளியிடம் ஒப்படைத்தனர். 5 நிமிடத்தில் துரிதமாக செயல்பட்டு தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

  • சந்துரு தென்காசியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
  • சமையலறையில் சிறுவன் சந்துரு தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார்.

  தென்காசி:

  தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மகன் சந்துரு (வயது 17). இவர் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவனு க்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்து கொண்டு மாற்று சான்றிதழ் வாங்கி தருமாறு வீட்டில் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

  கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த நிலையில், தென்காசியில் உள்ள அவரது தாத்தா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து இருந்து வந்துள்ளார். சிறுவனும், அவரது தாத்தா சுப்பிரமணியனும் (69) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தாத்தா சாப்பாடு வாங்க சென்றுள்ளார்.

  சாப்பாடு வாங்கி விட்டு வந்து பார்த்தபோது சிறுவன் சந்துரு அந்த வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித் ததில் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரி வித்து ள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஆட்டோ டிரைவரான செய்யது மசூது மற்றும் அவரது நண்பர்கள் அணைக்கு வரும் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்றனர்.
  • போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறை அதிகாரிகள் இரவு சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரமாக போராடி உயிரிழந்த டிரைவரை மீட்டனர்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான மேக்கரை அருகே உள்ள அடவிநயினார் அணை 132 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

  இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் அணையில் குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 94 அடியை கடந்துள்ளது.

  நேற்று மாலை அச்சன்புதூர் நடுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செய்யது மசூது(வயது 32) மற்றும் அவரது நண்பர்கள் அணைக்கு வரும் நீர் வீழ்ச்சியில் குளிக்கச்சென்றனர். அப்போது பாறை இடுக்கில் செய்யது மசூது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த அச்சன்புதூர் போலீசார் மற்றும் செங்கோட்டை தீயணைப்பு துறை அதிகாரிகள் இரவு சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரமாக போராடி உயிரிழந்த டிரைவரை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • அப்போது ராஜூ என்பவர் வைத்திருந்த கடைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதன்பேரில் கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையிலான போலீசார் கடையநல்லூரில் உள்ள தினசரி மார்க்கெட் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் வடக்கு விளை தெருவை சேர்ந்த ராஜூ(வயது 37) என்பவர் வைத்திருந்த கடைகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

  அதனைத்தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ராஜூவும், கடையநல்லூர் பேட்டை நத்துகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நத்தகர் பாதுஷா(47) என்பவரும் கடையநல்லூரில் மொத்தமாக கடைகளுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் பாதுஷா, ராஜூ ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .

  • கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.
  • கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, கமிஷனர் சுகந்தி, பொறியாளர் அப்துல்காதர், உதவி பொறியாளர் கண் ணன், சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், மேலாளர் சண்முக வேல், கணக்கர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.

  குடிநீா விநியோகம்

  கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதி பாலீஸ்வரன், பூங்கோதைதாஸ், சுபா ராஜேந்திர பிரசாத், தன லெட்சுமி, பாலசுப்பிர மணியன், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகைதீன் கனி, மீராள்பீவி, திவான்மைதீன், யாசர்கான், வேல்சங்கரி, சங்கர நாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், அக்பர்அலி, பீரம்மாள், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராம கிருஷ்ணன், மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், சண்முக சுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, செய்யதலி பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

  கூட்டத்தில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையான மாதாந்திர மதிப்பூதியத்தினை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் விநியோகத்தின் அளவு வறட்சி காலங்களில் உள்ளூர் குடிநீர் திட்ட ஆதாரத்தில் நீரின் அளவு குறைய பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது.

  10 வார்டுகள்

  மேலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அளவு குறைவாக வரப்பெற்று குடிநீர் வினியோகம் பாதிப்பிற்குள்ளாகிறது. தாமிரபரணி குடிநீரானது 10 வார்டு மக்களுக்கு மட்டும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கும் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தேவைப்படும் குடிநீரின் அளவிற்கு ஏற்ப தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தாமிரபரணி குடிநீர் ஆதாரத்தின் மூலம் நகராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் மூலமாகவோ அல்லது கூட்டு குடிநீர் திட்டத்தின் கூடுதலாக தண்ணீர் கிடைப்பதற்கு புதியதாக குடிநீர் திட்டத்தை செயல்ப டுத்தி தர அரசிடம் கோருவது உள்பட பல்வேறு தீர்மான ங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

  கூட்டத்தின் போது நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறக்கி சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞா னிகள் மற்றும் குழுவின் தலைவர் வீரமுத்துவேலுக்கு அனைவரும் எழுந்து நின்று நன்றி, பாராட்டு தெரிவித்தனர்.

  • கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
  • விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர்ஆறுமுகம் எடுத்துரைத்தார்.

  கடையநல்லூர்:

  கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் குமரன் தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய ஆக்கி அணி தலைவரும், அர்ஜுனா விருது பெற்றவருமான பிலிப்ஸ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

  ஆங்கில துறை தலைவர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். விளையாட்டு கலாச்சாரம் என்ற தலைப்பில் ஆறுமுகம் எடுத்துரைத்தார். சிகரம் நோக்கி என்ற தலைப்பில் பிலிப்ஸ் மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டில் சிகரத்தை எப்படி அடைவது என்பது பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்தார். விளையாட்டு, வீரர்களுக்கு தனது அறிவுரைகளை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் பிரேமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் குரு சித்திர சண்முக பாரதி, பால் மகேஷ் பேபி மாலினி, மீனாட்சி , முருகன், துரை லிங்கம், சாம்சன் லாரன்ஸ், மாரி செல்வம், ராஜேஷ் கண்ணா, மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

  • கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.
  • தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.

  கடையநல்லூர்:

  தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

  கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.

  இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் பெரியாற்றுப்படுகையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறு அமைக்கப் பட்டும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணைக்கட்டு குடிநீர் திட்டம் என இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தொடர் வெயில் காரணமாக வும், தென்மேற்கு பருவ மழையும் பொய்த்ததால் பெரியாறு கல்லாற்றிலும் தண்ணீரின்றி வறண்டு விட்டது.

  கடையநல்லூர் நகராட்சிக்கு சராசரியாக சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் வரத்து வந்த நிலையில், தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.

  இந்த குடிநீரை வைத்து தான் அனைத்து பகுதி களுக்கும் சரி சமமாக பகிர்ந்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றோம்.

  எனவே இப்பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீரை கூடுதலாக திறந்து விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.