என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.
கடையநல்லூர் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி
கடையநல்லூர் தாலுகா பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது. கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாய கணக்கு ஆய்வு (ஜமாபந்தி) நேற்று (செவ்வாய்க்கிழமை) புளியங்குடி குறு வட்டத்திற்கும் இன்று (புதன்கிழமை) ஆய்க்குடி குறுவட்டத்திற்கும் நடந்தது.26-ந் தேதி (வியாழக் கிழமை) கடையநல்லூர் குறு வட்டத்திற்கு நடை பெறுகிறது.
31 கிராமப்பகுதிகளிலுள்ள வருவாய் கணக்குகளை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கங்காதேவி தலைம தாங்கினார். கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த், சமூகநல தாசில்தார் அழகப்பராஜா, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ராம்குமார்,
கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் , மண்டல துணை தாசில்தார் ராஜாமணி, ஹெட் சர்வேர் சாகுல் ஹமீது, வருவாய் ஆய்வாளர் காசி லட்சுமி, புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆய்குடி வருவாய் ஆய்வாளர் சங்கரஈஸ்வரி ஆகியோர் கணக்கு தீர்வாயப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
நிகழ்ச்சியில் ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிக அளவு முதியோர் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். முன்னதாக ஆர்.டி.ஓ. கங்காதேவி தாலுகா அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

Next Story