search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
    X

    மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்ற போது எடுத்த படம்.


    கடையநல்லூரில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

    • கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும்,

    கூட்டுறவு சங்க தலைவருமான செல்லத்துரை தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், பள்ளி மேலாண்மை குழு டாக்டர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜின்னி இவாஞ்சலின் ஜோஸ் வரவேற்று பேசினார். தனுஷ் குமார் எம்.பி. 398 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான 9.5 லட்சம் செலவிலான 60 இருக்கைகளை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். நிகழ்ச்சிகள் தி.மு.க. நகர செயலாளர் அப்பாஸ் உட்பட பள்ளியின் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


    Next Story
    ×