என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் படம் திறப்பு
    X

    வீரன் அழகுமுத்துக்கோனின் உருவ படத்தை திறந்து வைத்த காட்சி


    கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் படம் திறப்பு

    • கடையநல்லூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீரன் அழகுமுத்துக்கோனின் புதிய படத்தை திறக்க வேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
    • நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்தை நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீரன் அழகுமுத்துக்கோனின் புதிய படத்தை திறக்க வேண்டும் என கடந்த நகராட்சி கூட்டத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் முருகன் உட்பட 5-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

    அதன்படி நேற்றைய தினம் நகராட்சி கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் உருவப்படத்தை நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர், லதா, சுகாதார அலுவலர் இளங்கோவன், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகர அமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், நகர மன்ற உறுப்பினர் முருகன், முஹைதீன் கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×