என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடையநல்லூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா
  X

  ஓ.பி.எஸ். அணி சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா நடைபெற்ற போது எடுத்தபடம். 

  கடையநல்லூரில் ஓ.பி.எஸ். அணி சார்பில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு நகர பொறுப்பாளர் இசக்கி துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
  • கடையநல்லூர் அவைத் தலைவர் சுந்தரய்யா உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  கடையநல்லூர்:

  தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் நகர ஓ.பி.எஸ். அணி சார்பில் பதிவுத்துறை அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு நகர பொறுப்பாளர் இசக்கி துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

  நிகழ்ச்சியில் செங்கோட்டை நகரப் பொறுப்பாளர் மாரியப்பன், சொக்கம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் செல்லதுரை, கடையநல்லூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் அவைத் தலைவர் சுந்தரய்யா உட்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×