கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர்- இளம்பெண் பலி

விக்னேஷ் மனைவி அகிலா அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார். அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.
விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், பலியான வாலிபரையும் படத்தில் காணலாம்.
விபத்தை ஏற்படுத்திய பஸ்சையும், பலியான வாலிபரையும் படத்தில் காணலாம்.
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி அகிலா (19).

தீபாவளியை யொட்டி நேற்று அவர் தென்காசி மங்கம்மா சாலையை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்று உள்ளார்.

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொல்லம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அரசு பஸ்சை ஓட்டி வந்த ராஜபாளையம் சேத்தூரை சேர்ந்த டிரைவர் லாரன்ஸ் சேவியர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com