என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் கடத்தி வரப்பட்ட  82 கிலோ குட்கா பறிமுதல்
  X

  பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ் மூலம் கடத்தி வரப்பட்ட 82 கிலோ குட்கா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது. அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

  நெல்லை:

  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை மாவட்டம வள்ளியூருக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் வந்தது.

  அதில் பெரிய பார்சல் ஒன்று வந்தது. பார்சலில் முகவரி எழுதப்படாமல் செல்போன் எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதனால் சந்தேகம் பஸ் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர்.

  போலீசார் அந்த பார்சலை உடைத்து பார்த்த போது அதில் 82 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர்.

  அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

  முதற்கட்ட விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக வெளியூரில் இருந்து குட்கா கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×