search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கைது"

    • திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • வாலிபரின் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டி அவரை தாக்கியவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மாற்றுத்திறனாளியை தாக்கிய வாலிபரை கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே செங்குறிச்சி தேவேந்திர புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது34). மாற்றுத்திறனாளி. இவர் தனது வீட்டின் முன்பு 3 சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பழனிச்சாமி, முருகன் ஆகியோர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும். வண்டியை எடுங்கள் என கூறி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஊனத்தை சுட்டிக்காட்டி திட்டியும் அவரை தாக்கியும் உள்ளனர்.

    இது குறித்து வடமதுரை ேபாலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

    பாடியூர் கருவேப்பிலை தோட்டத்தை சேர்ந்தவர் குயிலி(38). இவரது மாம னார் கருப்பண்னனுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவ த்தன்று அவர்கள் நிலத்தில் ராமகிருஷ்ணன், முருகேசன் ஆகியோர் உழவு பணி மேற்கொண்டனர்.

    இதனை கருப்பணன் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர். காயம் அடைந்த கருப்பணன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் குயிலியையும் தாக்கி திட்டி உள்ளனர். இது குறித்து வடமதுரை போலீசில் அளித்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    • சந்தோஷ் 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது.
    • சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச் சேரியை அடுத்த ராயன் பாளையத்தில் உள்ள பாட்கோ காலனியில் வசிப்பவர் சந்தோஷ். (வயது 20) இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை, தவறான நோக்கில் கட்டி பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.

    • சாக்ரடீஸ் மங்களூரில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.
    • ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை:

    செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் சாக்ரடீஸ் (வயது 37).

    இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800 பறித்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சாக்ரடீஸ் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கத்திமுனையில் பணம் பறித்தது குனியமுத்தூர் சதாம் நகரை சேர்ந்த சரவணன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார்.
    • தர்மராஜை போலீசார் கைது செய்த பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை :

    கோவை புலியகுளத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் (வயது 22) என்ற வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார். பின்னர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். இதனையடுத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தர்மராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்மராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • 30 மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
    • போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றிருப்பதாகவும் அவரது கையில் பை ஒன்றை வைத்து கொண்டு அந்த பையிலிருந்து எதையோ எடுத்து விற்பது போன்று உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரவேணு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(48) என்பதும், அவர் வைத்திருந்த பையில் 30 மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.உடனடியாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது.
    • நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தாரணி (வயது 27). இவர் காட்டூர் போலீசில் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் கம்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளேன். கடந்த 2020-ம் ஆண்டு எனது பேஸ்புக் பக்கத்தை பார்த்த போது விளம்பரம் ஒன்று வந்தது. இதில் நார்வே நாட்டில் வேலை இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து நான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

    அதன் பின்னர் சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் இருந்து மேலாண்மை இயக்குனர் முருகன் பேசுவதாகவும், அலுவலகத்துக்கு நேரில் வருமாறு கூறினார். இதனையடுத்து நார்வே நாட்டில் வேலை கிடைக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் நானும் எனது கணவரும் அந்த அலுவலகத்துக்கு சென்றோம்.

    அங்கு இருந்த முருகன் விசா, விமான டிக்கெட் உள்பட ரூ.6 லட்சம் செலவாகும் என கூறினார். இதனையடுத்து நான் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் கொடுத்த கூகுள்பே எண்ணுக்கு பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூ.5 லட்சம் அனுப்பி வைத்தேன். அதன் பின்னர் முருகன் நார்வே நாட்டிக்கு செல்வதற்கு விசா கொடுத்தார். விமான டிக்கெட் பின்னர் வரும் என தெரிவித்தார்.

    நான் விசாவை சரிபார்த்த போது அது போலியானது என்பது தெரிய வந்தது. அதன் பின்னர் விசாரித்த போது முருகன் என்னை போல 10-க்கு மேற்பட்டவர்களிடம் இதே போல நார்வே நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. எனவே நான் கொடுத்த ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணிடம் மோசடி செய்த முருகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்

    சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ரமேஷ்(38) என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் போலீசார் ரோந்து சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள், சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விருதுநகர் பஜார் போலீசார் சம்பவத்தன்று ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

    உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்றது தெரியவந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26), இலகேஸ்வரன் (19), கோகுல கண்ணன் (19) என தெரிய வந்தது.

    3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இதேபோல் விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள நேருஜி தெருவை சேர்ந்த கிஷோர் (28) என்பவரை கைது செய்த பாண்டியன் நகர் போலீசார் அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா, 18 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர் சின்ன பள்ளிவாசல் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார், சிவா ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய சிவாவை தேடி வருகின்றனர்.

    ×