கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது

சாக்ரடீஸ் மங்களூரில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார்.ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர் கைது
Published on

கோவை:

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் சாக்ரடீஸ் (வயது 37).

இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக கோவை வந்தார். ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் நடந்து சென்றார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800 பறித்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சாக்ரடீஸ் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கத்திமுனையில் பணம் பறித்தது குனியமுத்தூர் சதாம் நகரை சேர்ந்த சரவணன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com