மேட்டுப்பாளையத்தில் கோவிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்திய வாலிபர்

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை
மேட்டுப்பாளையத்தில் கோவிலுக்கு சென்ற 15 வயது சிறுமியை கடத்திய வாலிபர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.

ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com