மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

30 மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றிருப்பதாகவும் அவரது கையில் பை ஒன்றை வைத்து கொண்டு அந்த பையிலிருந்து எதையோ எடுத்து விற்பது போன்று உள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரவேணு பகுதியை சேர்ந்த சிவக்குமார்(48) என்பதும், அவர் வைத்திருந்த பையில் 30 மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.உடனடியாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com