search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharapuram"

    • டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பிட உள்ளன.

    1. டூல் அண்டு டைமேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் /சீர் மரபினர். முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. டூல் அண்டுடை மேக்கர் தொழிற் பிரிவு (பிடி. ஜே&எப்) கல்வித் தகுதி ஆகும்.

    2. வயர்மேன் தொழிற்பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழு நேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் டிகிரி/ டிப்ளமோ மற்றும் என்.டி.சி. வயர்மேன் தொழிற்பிரிவு கல்வித் தகுதி ஆகும்.

    என்.டி.சி. ஆக இருப்பின் 3 வருட தொழிற்சாலை அனுபவம், என்.ஏ.சி. ஆக இருப்பின் இரண்டு வருட தொழிற்சாலை அனுபவமும் அதே தொழிற் பிரிவில் இருக்க வேண்டும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ. முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ. முடித்தவர்கள் டிப்ளமா ,டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநருக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தாராபுரம்-638 657 என்ற முகவரிக்கு வரும் 30.8.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இத்தகவலை தாராபரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் முதல்வர் தெரிவித்துள்ளார்.  

    • அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
    • மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரம் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கவுண்டச்சிபுதூர், நஞ்சியம்பாளையம், தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ், நவனாரி, பெரிய குமாரபாளையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்களுக்கு சுண்ணாம்பு காடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த 50 குக்கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மின்மோட்டார்களை சரி செய்து உடனடியாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என காவிரி கூட்டு குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டபவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது.
    • பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர்.

    தாராபுரம் :

    திருப்பூரில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், குடும்ப நல நீதிபதி சுகந்தி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் நீதிபதி ஸ்ரீ குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி மற்றும் வழக்கறிஞர்கள் பாலகுமார், பழனிசாமி, ராஜேந்திரன், பாலாஜி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சார்பு நீதிபதிகள் நீதிபதி தர்மபிரபு மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கே. எஸ். பாபு , முனிசிப் மதிவதனி, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் 2019ம் ஆண்டு விபத்தில் காலில் முறிவு ஏற்பட்ட தென்தாரை பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 24) என்பவருக்கு இழப்பீடாக ரூ.50ஆயிரம் பெற்று கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வக்கீல் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம் :

    தாராபுரம் பஸ் நிலையத்தில் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் ராமர் கலந்துகொண்டு மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் பவர் சேகர், அம்மன் நாகராஜ், முத்துலட்சுமி ,பழனிசாமி ,புனிதா, சக்திவேல், தேவிஅபிராமி, கார்த்திகேயன் மற்றும் நகராட்சி ஆய்வாளர் அருண் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகரில் அனுமதி பெறாத பிளக்ஸ் மற்றும் சினிமா சுவரொட்டிகள் , விளம்பர சுவரொட்டிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என கூறி விளம்பர பேனர்களை அகற்றும் பணிகளை நகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தார். 

    • திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

    தாராபுரம் :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார்.

    உற்சாக வரவேற்பு :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று முதல் முறையாக வருகை தந்ததால் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

    பிளக்ஸ் பேனர்கள் :

    தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி உடுமலை ரவுண்டானாவில் இருந்து அமராவதி சிலை வரை தாராபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமி வருகையால் தாராபுரம், காங்கயம் நகரம் இன்று விழாக்கோலம் பூண்டன. காங்கயம் நகர்ப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே பெரிய அளவில் 40 அடி நீள பேனரும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக எடப்பாடி பழனி சென்றதால் அந்த சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக .அதி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஆழமான பகுதிக்குச் சென்ற வாலிபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
    • குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் எஸ்.தினேஷ்குமாா் ( வயது 24). கட்டடத் தொழிலாளியான இவா் தனது தம்பி கவின்குமாா், நண்பா் அமீருடன் தாராபுரம் அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவருடன் குளித்துக் கொண்டிருந்தவா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினா் ஆற்றில் இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

    ஆனால் மீட்க முடியவில்லை. இந்த நிலையில், அமராவதி பழைய பாலத்தின் அருகில் ஒருவரது சடலம் மிதந்து வருவதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.இதன் பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது தினேஷ்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

    • பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பஸ் கணியூர் அடுத்த சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்து. அப்போது செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பஸ்ஸில் இருந்த பயணிகளும் லாரியின் முன்புறம் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு கோவை மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப்பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் டூல் அன்ட் டை மேக்கர், 3 வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. டூல் அன்ட் டை மேக்கர் பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வி தகுதி ஆகும்.

    வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (தற்காலிக முழுநேர, தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். என்.டி.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 3வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வித்தகுதி ஆகும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை . தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தாராபுரம் - 638657 என்ற முகவரிக்கு வரும் 19.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என முதல்வர், தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். 

    • அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் :

    அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    இது குறித்து அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் விஜயஈஸ்வரன் கூறியதாவது:- அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்ய உள்ளாா்.எனவே, இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்துகொண்டு மின் சம்பந்தமான தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்றாா்.

    பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை நடைபெறுகிறது.இது குறித்து தாராபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பல்லடம் மின் பகிா்மான வட்டம், தாராபுரம் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் தாராபுரம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.இக்கூட்டத்துக்கு பல்லடம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா்.இதில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் மழை காலங்களில் சாக்கடை நீர் சாலைகளில் செல்வதாலும், பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி ,சின்ன கடை வீதி , பூக்கடை கார்னர் சர்ச் வீதி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    எனவே மழை காலங்களில் சாக்கடை நீர் ரோட்டில் செல்லாமல் தடுப்பதற்காகவும் தாராபுரத்தில் அனைத்து பகுதியிலும் நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி இணைந்து கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகளை அகற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் அகற்றப்பட்ட கற்குவியல்கள் கடை வீதி எங்கும் காணப்படுகின்றன .ஒரு சில இடங்களில் தெருவிற்கு செல்லும் ரோட்டை அடைத்து கிடப்பதால் அந்த வீதியில் இருந்து வெளியே வரும் பள்ளிக்குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 2 கிலோ மீட்டர் அளவுக்கு சுற்றி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கற்களையும் மண்ணையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் ,வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார் .
    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

    தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கப்பட்டுள்ள கலைக்கல்லூரி தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ,மாவட்ட கலெக்டர் வினீத் , நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி, பிரபாவதி, மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாதன் ,ஒன்றிய செயலாளர் எஸ் .பி., செந்தில்குமார் ,நகர செயலாளர் தனசேகரன், மற்றும் தாராபுரம் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    • புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
    • தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-

    தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.

    ×