search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennimalai"

    • வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர். 

    • சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர்.
    • அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று மாலை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கர் மலை மீது குவிந்தனர். 'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும் சென்னிமலை முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாக திருவிழா நடக்கிறது.

    முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 66-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது இன்று காலை 11 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    வைகாசி விசாகத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை அருகே சோள தட்டுப்போர் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னப்பன் (வயது 65). விவசாயி.

    இவரது தோட்டத்தில் மாடு,எருமைகளுக்கு தேவையான தீவனத்திற்காக சோளத்தட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். இதில் இருந்து நேற்று மதியம் கரும்புகை வந்தது.

    அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது தட்டுப்போர் தீயில் எரிந்து கொண்டிருந்தது. உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மள மளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கூறும் போது, தட்டுப்போரின் அருகில் உள்ள தென்னை மரத்திலிருந்து பலத்த காற்றில் கீழே விழுந்த தென்னை மட்டைகள் அருகில் இருந்த மின் கம்பத்தின் கம்பி மீது விழுந்து அதில் இருந்து ஏற்பட்ட தீ தென்னை மட்டையில் பற்றியுள்ளது.

    பின்னர் அது தட்டுப்போரின் மீது விழுந்து இந்த தீ விபத்து நடந்து இருக்கலாம் என்றார்.

    சென்னிமலை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை காங்கயம் மெயின் ரோட்டில் சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரியில் இரு சக்கர வாகனத்தில் மோதிய கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கேரளா மாநிலம், ஆழப்புழா, சேர்தலா பகவதிபரம்பல் ஊரை சார்ந்தவர் ஹாஜி இவரது மகன் ஆனந்த் வயது (21), பெருந்துறை அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்தார்.

    இன்றும் நாளையும் கல்லூரி விடுமுறை என்பதால் 4 இரு சக்கர வாகனங்களில் 8 மாணவர்கள் கொடைக்கானல் சுற்றுலாவிற்காக சென்று கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை சென்னிமலை பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.ஒரு வாகனத்தில் ஆனந்த் ஹெல்மெட் அணிந்து ஓட்டி வந்தார். அப்போது சிமெண்ட் பாரம் ஏற்றிய லாரி காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்தது.தெற்கு ராஜ வீதி வளைவில் வந்து மெயின் சாலையில் திரும்பும்போது ஆனந்த் தடுமாறி லாரியின் சக்கரத்தில் மோதி கீழே விழுந்தார்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பரிதாபமாக ஆனந்த் உயிரிழந்தார்.

    இன்னும் கல்லூரி படிப்பு முடிக்க சில மாதங்களே உள்ள நிலையில் விபத்தில் மாணவர் பலியானது கல்லூரி மாவணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னிமலை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தலவுமலை, சல்லிமேடு, அம்மன்கோவில், கே.சி., வலசு சுற்றுவட்டார பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

    இதில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கால் மூட்டுகள் வீங்கி அதிக வலி வருகிறது.

    இதனால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தியும் கொசு மருந்தடித்தும் சாக்கடைகளை சுத்தப்படுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் காய்ச்சல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் காய்ச்சலால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மக்கள் சென்னிமலை, அரச்சலூர், நத்தக்கடையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு அதிக செலவு செய்வதாலும் வேலைக்கு செல்லாமல் முடக்கி விடுவதாலும் ஏழை கூலிகளும், நடுத்தர விவசாய மக்களும் பொருளாதர ரீதியாக பாதிப்படைகிறார்கள்.

    எனவே மாவட்ட சுகாதாரத்துறை காய்ச்சல் கட்டுப்படும் வரை இந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னிமலை அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகில் உள்ள ஈங்கூரில் மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் முருகேசன் (51). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் விரக்தியடைந்து காணப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். குடும்பம் நடத்த பணம் எதுவும் தராமல் இருந்ததால் இதுகுறித்து இவரது மனைவி இவரிடம் கேட்டுள்ளார். அப்போது வீட்டை விட்டு வெளியில் சென்ற முருகேசன் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை.

    பின்னர் அதிகாலையில் சென்று தேடியபோது ஈங்கூரில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் அருகில் வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தது தெரிந்தது.

    இதுகுறித்து இவரது மகன் கவுரிசங்கர் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ளது சி.எஸ்.ஐ. காலனி. இங்கு வசிப்பவர் தனபாக்கியம் (65) இவரது கணவர் சாமுவேல், கடந்த 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் தனபாக்கியம் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனபாக்கியம் சென்று விட்டார்.

    நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியானார். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 5½ பவுன் தாலிக்கொடி, 1ž பவுன் மோதிரம் ஒன்று ½ பவுன் மோதிரம் ஒன்று மற்றும் ½ பவுன் தோடு திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தனபாக்கியம் தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கிறார்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே குடும்ப தகராறு காரணமாக மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.

    இவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.

    கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பிறகு தானும் வி‌ஷம் குடித்தார்.

    சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    ×