search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ"

    • அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது.
    • வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அய்யூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வெப்பத்தால் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால், அரிய வகை மரங்கள் மற்றும் செடி கொடிகள் தீயில் கருகி சேதமானது. காட்டு தீயால் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பறவைகள், உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து, ஓசூர் வன கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், தேன் கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன், தலைமையில் வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு காட்டுத் தீ ஏற்படுவதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழுவபெட்டா வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசப்பா (வயது29) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து வனப்பகுதியில் தீ வைத்த குற்றத்திற்காக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    வனத்துறையினர் மல்லே சப்பாவை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையிலடைத்தனர்.

    வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தீ விபத்து ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது வனச்சட்டங்களின் படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
    • 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.

    செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.

    10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.

    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
    • ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது.

    அசாமில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் குளிர் தாங்க முடியாததால் வரட்டியை தீமூட்டி குளிர்காய்ந்த அரியானாவைச் சேர்ந்த இருவரை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

    டெல்லி செல்லும் சம்பார்க் கிராந்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதாக கேட்மேன் அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து, ஓடும் ரெயிலில் நெருப்பை பற்றவைத்த இருவர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பேரழிவு தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து அலிகரில் உள்ள ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "ஜனவரி 3 ஆம் தேதி இரவு, பர்ஹான் ரெயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கில் கேட்மேன், வந்து கொண்டிருந்த ரெயிலின் பெட்டியிலிருந்து தீ மற்றும் புகை வெளியேறியதை கண்டு உடனடியாக பர்ஹான் ரயில் நிலையத்தில் உள்ள தனது உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பிறகு ஆர்பிஎஃப் குழு ரெயிலை அடுத்த ஸ்டேஷன் சாம்ரௌலாவில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதே நேரத்தில், ஓடும் ரெயிலின் வழியாகச் சென்று பாதுகாப்பு படை பார்த்தபோது, கடும் குளிரில் இருந்து விடுபடுவதற்காக, ரெயில் பெட்டி ஒன்றில் சிலர் வரட்டியில் தீ மூட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.

    பெரிய சேதம் ஏதும் நிகழும் முன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பின்னர் ரெயில் அலிகார் சந்திப்பிற்குச் சென்றது. அங்கு இதுதொடர்பாக 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

    மேலும், ஃபரிதாபாத்தைச் சேர்ந்த சந்தன் (23) மற்றும் தேவேந்திரா (25) என இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பின்னர் அவர்களுடன் இணைந்த மற்ற 14 சக பயணிகளும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் சுதா கொங்கரா புதிய படம் இயக்குகிறார்.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சூர்யா 43' படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கியுள்ளதாகவும் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ளபோலீசார் சென்றனர்.

    ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

    சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிணவறையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலா வதியான மருத்து வமனை பொரு ட்கள். மருத்துவமனையில் தேவையற்ற பொருட்களை வைத்திருந்த அறை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.அரசு மருத்துவமனை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.
    • தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர்

    இரணியல் :

    திங்கள்நகர் பேரூராட்சி மார்க்கெட் வரி வசூல் செய்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வரி வசூல் மையம் மார்க்கெட் நுழைவு சாலையில் உள்ளது. அங்கு உயர்கோபுர மின் விளக்கு, மின் மீட்டர் பெட்டி உள்ளது. வரி வசூல் மைய மின் மீட்டரும், உயர் கோபுர விளக்கிற்கும் உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இந்த மின் மீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு மீட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த வழியாக குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் ரோந்து வந்தார். அவர் மின் மீட்டர் தீயில் எரிவதை பார்த்து உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கும், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டருக்கும் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். இன்ஸ்பெக்டர் பெருமாள், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ஸ் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று பரவும் தீயை சுமார் ½ மணி நேரம் போராடி அணைத்தனர். இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மின் மீட்டர் தீப்பிடித்து எரிந்ததில் தக்க நேரத்தில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி மேற்கொண்ட டி.எஸ்.பி. தங்கராமனை அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

    திங்கள் நகர் பேரூராட்சி பகுதியில் மின் விநியோகம் நடைபெறும் மின்கம்பிகள் முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உறவினர் வாகனங்களுக்கு தீ வைத்த திருச்சி பெண் கைது செய்யப்பட்டார்
    • கணவர் 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜா. இவருக்கும் திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

    விமல்ராஜா தன்னை பிரிந்ததற்கும், 2-வது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் (வயது 50) காரணம் என்று கோகிலா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்த கோகிலா அவரது மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கோகிலாவை கைது செய்தனர்.

    • பெரம்பலூர் பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட செயலாளரின் 2 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது 50). இவர் பி.ஜே.பி. கட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் தனபால் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட எதிரே குடியிருக்கும் வரதராஜ் என்பவர் கூச்சலிட்டு உள்ளார். அவரின் கூச்சலை கேட்டு தனபால் வெளியே வர எந்தனித்து உள்ளார். ஆனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.

    இதற்கு காரணம் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர பொது மக்களுடன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த தனபால், தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து கருகியது.

    முன்விரோதம் காரணமாக அவரது2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது.
    • அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து தங்கையாவை மீட்க முயன்றனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கையா (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்த மான தோட்டம் ஊருக்கு வட புறமாக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இனி தொடங்கும் என்பதால் வயலில் முளைத்திருந்த முட்செடிகளை அப்புறப் படுத்தி நெல் நடவுக்கு வேண்டிய பணிகளை மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். இதற்காக நேற்று மாலை அவர் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.

    அப்போது காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பக்கத்து வயல்களுக்கும் பரவியது. தீ பற்றி எரிந்ததால் தென்னை ஓலைகளை கொண்டு அதனை அணைக்க தங்கையா முயற்சி செய்து உள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவர் தீயில் தடுமாறி விழுந்தார்.

    இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் கத்தி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். 

    ×