

கன்னியாகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேல மாவிளையைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி செல்ல ம்மாள் (வயது 80).
இவரது வீட்டின் பின் புறம் ஓலைகள் மற்றும் குப்பைகள் கிடந்து உள்ளன. அதனை அகற்ற செல்லம்மாள் திட்டமிட்டார்.
இதற்காக நேற்று அனை த்தையும் ஓரே இடத்தில் சேர்த்தார். பின்னர் அந்த குப்பைகளுக்கு அவர் தீ வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக செல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலறினார்.
இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த னர். அவர்கள் தீயை அணைத்து செல்லம்மாளை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.