search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 344 தீ விபத்துகள்
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 344 தீ விபத்துகள்

    • ரூ.1¾ கோடி பொருட்கள் பாதுகாக்கப்பட்டன
    • தீயணைப்பு துறையினர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், கன்னியா குமரி, திங்கள்சந்தை, தக்கலை, குளச்சல், குழித்துறை, குலசேகரம் மற்றும் கொல்லங்கோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் தீ விபத்து நடந்தால் தகவல் கிடைத்த உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் குளங்கள் மற்றும் ஓடைகளில் யாரேனும் தவறி விழுந்தால் அவர்களை மீட்பதிலும் தீயணைப்பு வீரர்களின் பங்கு முக்கிய மாக உள்ளது.

    குமரி மாவட்ட தீய ணைப்பு நிலையங்களுக்கு கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 344 தீ விபத்து அழைப்புகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று தீயை அணைத்ததின் மூலமாக ரூ.1.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டன. அதே நேரம் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 500 மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

    இதே போல கிணற்றில் தவறி விழுந்தது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது, குளத்தில் மூழ்கியது உள்ளிட்டவை தொடர்பாக 860 மீட்பு அழைப்புகள் வந்தன. அதில் உடனுக்குடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டதில் 111 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    Next Story
    ×