என் மலர்

  செய்திகள்

  சென்னிமலை பகுதியில் திடீர் ‘மர்ம’ காய்ச்சல்
  X

  சென்னிமலை பகுதியில் திடீர் ‘மர்ம’ காய்ச்சல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னிமலை பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
  சென்னிமலை:

  சென்னிமலை அருகே உள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தலவுமலை, சல்லிமேடு, அம்மன்கோவில், கே.சி., வலசு சுற்றுவட்டார பகுதியில் திடீரென மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.

  இதில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு கால் மூட்டுகள் வீங்கி அதிக வலி வருகிறது.

  இதனால் காய்ச்சல் ஏற்பட்டவர்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தியும் கொசு மருந்தடித்தும் சாக்கடைகளை சுத்தப்படுத்தியும் வருகிறார்கள். இருந்தாலும் காய்ச்சல் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகிறது.

  பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த கூலித் தொழிலாளர்கள். அவர்கள் காய்ச்சலால் சிகிச்சைக்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

  பாதிக்கப்பட்ட மக்கள் சென்னிமலை, அரச்சலூர், நத்தக்கடையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு அதிக செலவு செய்வதாலும் வேலைக்கு செல்லாமல் முடக்கி விடுவதாலும் ஏழை கூலிகளும், நடுத்தர விவசாய மக்களும் பொருளாதர ரீதியாக பாதிப்படைகிறார்கள்.

  எனவே மாவட்ட சுகாதாரத்துறை காய்ச்சல் கட்டுப்படும் வரை இந்த பகுதிகளில் சிறப்பு சிகிச்சை முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×