search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike"

    • அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடல் பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RTR 310 மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிள் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புகைப்படங்களில் புதிய அபாச்சி RTR 310 மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மாடல், பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. எனினும், தற்போதைய ஸ்பை படங்களில் புதிய மாடலின் சேசிஸ் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    இந்த மாடலின் ஃபிரேம் காணப்படாத நிலையில், இதன் சப் ஃபிரேம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. இதன் முன்புற ஃபோர்க் டியூப்கள் பிஎம்டபிள்யூ G310R மாடலில் இருப்பதை விட சற்று மெல்லியதாக காட்சியளிக்கின்றன. மற்ற பாகங்களான வீல்கள், பிரேக் டிஸ்க், சீட், எல்இடி லைட் உள்ளிட்டவை முற்றிலும் புதிதாக உள்ளன.

    புதிய அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் பவர் மோட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அடுத்த சில மாதங்களுக்குள் டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மாடல் கேடிஎம் 390 டியூக், ஹோன்டா CB300R மற்றும் பஜாஜ் டாமினர் 400 மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: IamBikerDotcom 

    • பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது.
    • மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது.

    மழையில் நனைந்து கொண்டு மோட்டார்சைக்கிள் ஓட்டும் வழக்கம் அனைவருக்கும் இருக்காது. சிலருக்கு இவ்வாறு செய்வது பிடிக்கும், சிலருக்கு மழையில் பைக் ஓட்டுவது சிக்கலான காரியமாக இருக்கும். ஒருசிலர் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மழையில் பைக் ஓட்டுவதை தவிர்த்து விடுவர்.

    எதுவாயினும், மழையில் பைக் ஓட்டும் சூழலை எல்லா நேரத்திலும் தவிர்த்து விட முடியாது. அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் நிலை ஏற்பட்டால், சில வழிமுறைகளை பின்பற்றினால் அச்சம் கடந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணத்தை நிறைவு செய்து விடலாம். அந்த வகையில், மழையில் பைக் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

     

    நிறங்கள்:

    மழையோ, வெயிலோ எந்த காலத்தில் பைக் எடுத்தாலும், சீட்டில் உட்காரும் முன் தேவையான பாதுகாப்பு அக்சஸரிக்களை அணிந்து கொள்வது அவசியம் ஆகும். மழையின் போது சாலையை அதிக தெளிவாக பார்க்க முடியாது என்பதால், சற்றே பிரகாசமான நிறங்களில் கிடைக்கும் ஹெல்மட்களை அணிவது நல்லது. இத்துடன் நீர்புகாத வசதி கொண்ட ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். இதுவும் சற்றே பிரகாசமான நிறம் கொண்டிருத்தல் நல்லது.

    வேகம்:

    மழையில் பைக் ஓட்டும் போது முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 முதல் 20 மீட்டர்கள் இடைவெளி விட்டு செல்வது அவசியம் ஆகும். மேலும் பைக்கை முடிந்த வரை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்.

    ஒருவேளை காரின் பின்னாடி பைக் ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், பைக்கினை டயர் காரின் பின் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு பைக் ஓட்டும் போது, கார் ஏதேனும் பள்ளத்தில் இறங்குவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனால் வீண் பதற்றம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

     

    பாதை:

    மழை காலங்களில் எல்லா சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதில்லை. சில இடங்களில் சாலையில் நீர் உடனடியாக வடிந்து விடும். சில பகுதிகளில் ஈரம் காய்ந்துவிடும். இதுபோன்ற பகுதிகளில் ஈரமான பகுதியை தவிர்த்து, நீர் காய்ந்து போன பகுதியில் பைக் ஓட்டலாம். ஈரமான தரையை விட ஈரமற்ற தரையில் பைக் அதிக சீராகவும், கண்ட்ரோல் சிறப்பாகவும் இருக்கும்.

    சுற்றுப்புறம்:

    மழையின் போது சுற்றுப்புறங்களை அதிக கவனமுடன் கையாள வேண்டியது அவசியம் ஆகும். அடிக்கடி கண்ணாடிகளை சரிபார்ப்பதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். இன்டர்செக்ஷன் அல்லது ரவுன்டானா உள்ளிட்டவைகளை கடக்கும் போது, மற்ற வாகனங்கள் வருகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    புதிய பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடப்படும் காட்சிகள் சினிமாக்களில் இடம் பெற்றுள்ளது. அதே போல திருவண்ணாமலையிலும் நூதன திருட்டு அரங்கேறி உள்ளது.

    திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் தனியார் பைக் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஷோரூமிற்கு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரியில் இருந்து டிப்-டாப் உடையில் வாலிபர் ஒருவர் காரில் வந்து இறங்கினார். அங்கிருந்த ஊழியர்களிடம் பைக் வாங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

    இதனை நம்பிய ஊழியர்கள் அந்த நபருக்கு புது பைக்குகளை காட்டினர். இதில் ஒரு புது பைக் பிடித்துப் போகவே அதனை ஓட்டி பார்ப்பதாக அந்த நபர் கூறினார். இதனால் ஊழியர்கள் சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அவரிடம் கொடுத்தனர்.

    ஆனால் ஊழியர்கள் பைக் வாங்க வந்தவரிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த நபர் பைக்கை ஓட்டி ஒத்திகை பார்ப்பதற்காக பைக்கை வெளியே ஓட்டி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த நபர் திரும்பி வரவில்லை . இதனால் ஷோரூம் ஊழியர்கள் பைக்கை எடுத்து சென்ற நபரை தேடிச் சென்றனர்.

    பின்னர் இது குறித்து காரில் இருந்த டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த வாடகை கார் என்றும், காரில் வந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தகவல் தனக்கு தெரியாது என்று டிரைவர் கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என டிரைவரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் நான் புதுச்சேரியில் இருந்து வருகிறேன் எனக்கு இந்த வாலிபர் யார் என தெரியாது அவரிடம் செல்போன் கூட இல்லை எனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் போன் செய்து திருவண்ணாமலைக்கு சவாரி உள்ளது என கூறி இவரை எனது காரில் அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நபர் கார் வாடகை கூட கொடுக்கவில்லை என கூறினார்.

    இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்கள் இது குறித்து ஷோரூம் உரிமையாளரிடம் நடந்த விவரங்களை பற்றி தெரிவித்தார்.

    மேலும் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் வந்து பைக்கை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • குளித்தலை அருகே பைக் மாயமானதாக போலீசில் புகார் கொடுக்கபட்டது
    • இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர்:

    குளித்தலை அடுத்த,கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 33). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பின்னர் இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
    • தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.

    பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.

    அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.

    இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.

    இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள்
    • புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 66).

    இவர் கடந்த 14-ந் தேதி மாலை பொதியம்பட்டி - புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகிறார். 

    • சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்திய சந்தையில் இந்த பிரிவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.

    சுசுகி நிறுவன இந்திய விற்பனையாளர்கள் V-Strom 650XT மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுசுகி நிறுவனம் V-Strom 800DE மாடல் அறிமுகம் பற்றி விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய சுசுகி V-Strom 800DE மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கவில்லை.

    சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி V-Strom 800DE மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

    சுசுகி V-Strom 800DE

    சுசுகி V-Strom 800DE

    இத்துடன் டு-வே குயிக்ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 21/17-இன்ச் ஸ்போக் வீல், டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர் ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஷோவா முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது இந்த பிரிவில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் சுசுகி V-Strom 800DE மாடல் பிஎம்டபிள்யூ F850GS, டிரையம்ப் டைகர் 900 ரேலி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    திருப்பத்தூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கப்பல் என்ஜினீயர் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாத்தாங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்   மகன் பாரத் (23). இவர் கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் என்ஜீனி யராக பணிபுரிந்தார். 

    விடுமுறையை அடுத்து இவர் சொந்த ஊரான காட்டாத்தங்குடிக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். இன்று கோவி லுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு  பைக்கில் திருப்பத்தூர் வந்தார்.   

    திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலை தங்கமணி தியேட்டர் அருகில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பாரத்,  ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு   சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    டிரையம்ப் நிறுவனத்தின் 2022 டைகர் 1200 மாடல் GT மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ரேலி என்பது ஆப் ரோடு சார்ந்த மாடல் ஆகும்.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் இரண்டு வேரியண்ட் மற்றும் நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. 

    2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் விலை ரூ. 19.19 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2022 டிரையம்ப் டைகர் 1200

    புதிய 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலில் 1160சிசி, இன்லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் ரக மோட்டார்சசைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மோட்டாரைச்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 

    விலை விவரங்கள்:

    2022 டிரையம்ப் டைகர் 1200 GT ப்ரோ ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 GT எக்ஸ்ப்ளோரர் ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி ப்ரோ ரூ. 20 லட்சத்து 19 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி எக்ஸ்ப்ளோரர் ரூ. 21 லட்சத்து 69 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    கே.டி.எம். இந்தியா நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2022 கே.டி.எம். RC 390 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய கே.டி.எம். RC  390 மாடலை விட ரூ. 36 ஆயிரம் விலை அதிகம் ஆகும். 2022 கே.டி.எம். RC  390 மாடல் இரண்டு முற்றிலும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    இவை கே.டி.எம். ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் போல்டு டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட கே.டி.எம். ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஃபேக்டரி ரேசிங் புளூ நிற வேரியண்டில் ஃபேரிங், பியூவல் டேன்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் புளூ ஷேட்களில் கிடைக்கின்றன. கே.டி.எம். ஆரஞ்சு நிற வேரியண்டின் பியூவல் டேன்க் மீது ஆரஞ்சு நிறமும், பியூவல் டேன்க் மீது பெரிய கருப்பு நிறத்தாலான கே.டி.எம். ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

     2022 கே.டி.எம். RC 390

    புது மாடலில் ஏராளமான அப்டேட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் TFT கன்சோல், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் குயிக் ஷிஃப்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க் உள்ளது.

    2022 கே.டி.எம். RC 390 மாடலில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    கே.டி.எம். நிறுவனத்தின் 250 டியூக் மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் USD ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.



    கே.டி.எம். இந்தியா நிறுவனம் 200 டியூக் மற்றும் 390 டியூக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களிடையே நிலவும் இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் கே.டி.எம். 250 டியூக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கே.டி.எம். 250 டியூக் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு அசத்தலான நிறங்களில் கிடைக்கிறது.

    அதன்படி கே.டி.எம். 250 டியூக் மாடல் டார்க் கல்வேனோ நிறத்தில் கிடைக்கிறது. இதில் எலெகெட்ரிக் ஆரஞ்சு மற்றும் மேட் பிளாக் நிறங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஆரஞ்சு நிற கிராஃபிக்ஸ், ஆரஞ்சு வீல்கள் மற்றும் ஃபிரேம்களில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு உள்ளது. இத்துடன் சில்வர் மெட்டாலிக் நிறத்திலும் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடலின் பியூவல் டேன்க் மீது 250 ஸ்டிக்கரிங் செய்யபர்பட்டு உள்ளது. 

    கே.டி.எம். 250 டியூக்

    மேலும் இதன் ஹெட்லேம்ப் கவுல், பின்பகுதிகளில் ஆரஞ்சு நிற ஹீண்ட் செய்யப்பட்டு உள்ளது. பிளாக்டு-அவுட் வீல்களில் ஆரஞ்சு நிற டேப் வழங்கப்பட்டு இருக்கிறது. டார்க் கல்வேனோ வேரியண்டை போன்றே இந்த நிற வேரியண்டிலும் ஆர்ஞ்சு நிற ஃபிரேம் உள்ளது. 

    கே.டி.எம். 250 டியூக் மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 பி.ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், யு.எஸ்.டி. ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்திய சந்தையில் கே.டி.எம். 250 டியூக் மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் ஹஸ்க்வர்னா 250 ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    ×