search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலனுடன் சேர்ந்து பைக்கில் சாகசம் செய்த போது விபத்தில் சிக்கிய இளம்பெண்- வீடியோ வைரல்
    X

    காதலனுடன் சேர்ந்து 'பைக்'கில் சாகசம் செய்த போது விபத்தில் சிக்கிய இளம்பெண்- வீடியோ வைரல்

    • வீடியோ வெளியிட்டு டெல்லி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார்.

    பைக்கில் சாகசம் செய்வது இளைஞர்களுக்கு பிடித்த விஷயமாகி போனாலும், சில நேரங்களில் அது ஆபத்தாகவும் முடிந்துவிடும். எனவே தான் போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டெல்லி போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அந்த வீடியோவில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சாகசம் செய்த காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தின. பைக்கில் வேகமாக செல்லும் இளைஞரை பின்னால் இருக்கும் அவரது காதலி கட்டிப்பிடித்து கொண்டிருக்கிறார். அப்போது வேகமாக சென்ற பைக்கில் வாலிபர் சாகசம் செய்த போது திடீரென நிலைதடுமாறி பின்னால் இருந்த பெண் கீழே விழுகிறார். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த காட்சிகள் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை வைத்து போலீசார் அந்த ஜோடியை அடையாளம் கண்டனர். பின்னர் அவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு வீடியோவையும் வெளியிட்டனர். அதில், நாங்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்துக்கு உள்ளானோம். எனவே பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×