search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிவிஎஸ் மோட்டார்ஸ்"

    • இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
    • அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.

    காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.

     


    ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.

    எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த முயற்சி.
    • உற்பத்தி மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரிப்பு.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஐ.சி. என்ஜின் மாடல்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

    எலெக்ட்ரிக் மற்றும் அட்வென்ச்சர் பைக் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் முயற்சியில் டி.வி.எஸ். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் டி.வி.எஸ். நிறுவனம் எதிர்காலத்தில் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களையும் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டி.வி.எஸ். நிறுவனம் 5 கிலோவாட் முதல் 25 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தியை மாதம் 25 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டிலேயே டி.வி.எஸ். நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ். எக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

    • டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்.
    • உள்நாட்டு விற்பனையில் டி.வி.எஸ். நிறுவனம் 25.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விற்பனையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.

    2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிருவனம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 292 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு விற்பனையான 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதுதவிர மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 3 லட்சத்து 85 ஆயிரத்து 443 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    இதன் மூலம் டி.வி.எஸ்.-இன் உள்நாட்டு விற்பனை 25.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாடல்களில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாடல் 91 ஆயிரத்து 824 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 19.19 சதவீதம் அதிகம் ஆகும். 

    • ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது.
    • இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரோனின் 225 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் டி.வி.எஸ். ரோனின் டி.டி. மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஏராளமான மாற்றங்கள், புதிய நிற ஆப்ஷனில் கிடைக்கிறது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ட்ரிபில் டோன் நிம்பஸ் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் புதிய கிராஃபிக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயின்ட் பிரைமரி டோனாகவும் வைட் நிறம் இரண்டாவது டோனாகவும், மூன்றாவதாக ரெட் நிற ஸ்டிரைப் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மோட்டார்சைக்கிளின் ரிம்களில் டி.வி.எஸ். ரோனின் பிராண்டிங், பிளாக்டு-அவுட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. சார்ஜர், வைசர் மற்றும் எஃப்.ஐ. கவர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ரோனின் டி.டி. ஸ்பெஷல் எடிஷன் மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 225.9 சிசி, ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.1 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் செப்டம்பர் 6-ம் தேதி புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. இதற்கான நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இந்த மாடலின் பெயர் மற்றும் விவரங்களை டிவிஎஸ் நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட RTR310 ரோட்ஸ்டர் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் டெயில் லைட் டுவின்-பாட் டிசைன் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டயர் ஹக்கரில் நம்பர்பிலேட் மற்றும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    தோற்றத்தில் இந்த மாடல் RR310-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய அபாச்சி RR310 மாடலில் இருப்பதை போன்றில்லாமல், RTR310 மாடலில் அப்ரைட் எர்கோனோமிக்ஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஹேன்டில்பார் அகலமாக காட்சியளிக்கிறது. புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அந்த வகையில், புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹார்டுவேரை பொருத்தவரை அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    • புதிய ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் உள்ளது.
    • டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கி இருக்கிறது. இந்த வெர்ஷனின் விலை ரூ. 84 ஆயிரத்து 468, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லாத வேரியன்டை விட ரூ. 2 ஆயிரத்து 300 வரை விலை அதிகம் ஆகும்.

    ப்ளூடூத் வசதி கொண்ட இரண்டாவது ஜூப்பிட்டர் வேரியன்ட் இது ஆகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் ZX ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் வேரியன்ட் விலை இதைவிட அதிகம் ஆகும். இந்த வேரியன்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்த காரணத்தால், தற்போது இந்த வேரியன்டிலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய அப்டேட் காரணமாக ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலெர்ட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பில்ட்-இன் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    மற்ற வேரியன்ட்களை போன்றே டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.77 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் வேரியன்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 240 என்றும் கிளாசிக் வேரியன்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 648 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்த மாடல் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
    • டிவிஎஸ் நிறுவனம் மேலும் பல எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிவிஎஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் XL மொபெட் மாடல் காப்புரிமை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் மாடலை மட்டுமே எலெக்ட்ரிக் பிரிவில் விற்பனை செய்து வருகிறது.

    இவைதவிர டிவிஎஸ் நிறுவனம் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. தற்போது XL எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி இருப்பதை அடுத்து டிவிஎஸ் நிறுவனம் மேலும் பல எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    தோற்றத்தில் இந்த மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இதன் பிரேம், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், டியுபுலர் கிராப்-ரெயில் உள்ளிட்டவை XL மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள் உள்ளன.

    தற்போதைய டிவிஎஸ் XL மாடலில் 99.7சிசி, சிங்கில் சிலின்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 4.3 ஹெச்பி பவர், 6.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மொபெட் மாடல் 86 கிலோ எடை கொண்டிருக்கிறது.

    Photo Courtesy: Bikewale

    • டிவிஎஸ் ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம்.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன பிரிவில், அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் டிவிஎஸ் ஐகியூப் மாடல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. ஒலா S1 சீரிஸ் முதலிடத்தில் இருக்கிறது. ஐகியூப் மாடலின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புது திட்டம் தீட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டிவிஎஸ் நிறுவனம் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் வழங்கப்பட்டு வந்த ஃபேம் 2 திட்ட மானியம் குறைக்கப்பட்டு விட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

     

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரினை சற்றே சிறிய பேட்டரி மற்றும் குறைந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஐகியூப் மாடலில் 3.04 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தனை அம்சங்கள் மற்றும் விலை காரணமாகவும், ஐகியூப் மாடல் குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது.

    அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை தற்போதைய வேரியன்டை விட ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.

    • அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடல் பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.

    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அபாச்சி RTR 310 மோட்டார்சைக்கிள் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிள் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புகைப்படங்களில் புதிய அபாச்சி RTR 310 மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த மாடல், பிஎம்டபிள்யூ G 310 R மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது. எனினும், தற்போதைய ஸ்பை படங்களில் புதிய மாடலின் சேசிஸ் மாற்றப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    இந்த மாடலின் ஃபிரேம் காணப்படாத நிலையில், இதன் சப் ஃபிரேம் முற்றிலும் புதிதாக இருக்கிறது. இதன் முன்புற ஃபோர்க் டியூப்கள் பிஎம்டபிள்யூ G310R மாடலில் இருப்பதை விட சற்று மெல்லியதாக காட்சியளிக்கின்றன. மற்ற பாகங்களான வீல்கள், பிரேக் டிஸ்க், சீட், எல்இடி லைட் உள்ளிட்டவை முற்றிலும் புதிதாக உள்ளன.

    புதிய அபாச்சி RTR 310 மாடலிலும் 310சிசி சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் பவர் மோட்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    அடுத்த சில மாதங்களுக்குள் டிவிஎஸ் அபாச்சி RTR 310 மாடல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மாடல் கேடிஎம் 390 டியூக், ஹோன்டா CB300R மற்றும் பஜாஜ் டாமினர் 400 மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: IamBikerDotcom 

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி RR 310.
    • கொலம்பியாவில் இந்த மாடலின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி RR 310 ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் அபாச்சி RR 310 மியாமி புளூ என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் முதற்கட்டமாக கொலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    அபாச்சி RR 310 மியாமி புளூ நிற வேரியண்டில் புளூ, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிறத்தில் அபாச்சி RR 310 மாடல் அதிக ஸ்போர்ட் மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் வீல்கள், ஃபிரேம், முகப்பு மற்றும் டெயில் பகுதியில் ரெட் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய அபாச்சி RR 310 மாடலில் 312சிசி, நான்கு வால்வுகள் கொண்ட சிலின்டர் சிங்கில் சிலின்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் அர்பன், ரெயின், ஸ்போர்ட் மற்றும் டிராக் என நான்கு ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.

    இவைதவிர புதிய அபாச்சி மாடலில் ஸ்மார்ட் எக்சோனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டி ஃபன்ஷன் ஸ்விட்ச்கியர், மிஷலின் ரோடு 5 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    Photo Courtesy: rpmotos

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    • அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.

    டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

    2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.

     

    முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

    பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    • டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐகியூப் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    • டிவிஎஸ் ஐகியூப் ஒட்டுமொத்த விற்பனையில் 89 சதவீதம் 2023 நிதியாண்டில் நடைபெற்று இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. 2023 பிப்ரவரி மாத வாக்கில் 15 ஆயிரத்து 522 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 15 ஆயிரத்து 364 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன. இதன் மூலம் ஐகியூப் மாடல் ஒட்டுமொத்தமாக இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

    இந்திய சந்தையில் இதுவரை மொத்தத்தில் ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 550 ஐகியூப் யூனிட்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விற்பனையில் 89 சதவீதம் மார்ச் 2023 இறுதியிலேயே நடைபெற்று இருக்கிறது. முன்னதாக 2023 நிதியாண்டிலேயே ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்ட டிவிஎஸ் இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. எனினும், 3 ஆயிரத்து 346 யூனிட்கள் இடைவெளியில் இது தவறிவிட்டது.

     

    கடந்த 12 மாதங்களாக டிவிஎஸ் ஐகியூப் மாடலுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரை 8 ஆயிரத்து 724 யூனிட்கள் விற்பனையான நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரை 15 ஆயிரத்து 645 யூனிட்களாக அதிகரித்து இருக்கிறது. பின் அக்டோபர் முதல் டிசம்பர் 2022-க்குள் 43 ஆயிரத்து 055 யூனிட்களாக உயர்ந்தது.

    ஐகியூப் மாடலின் விற்பனை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பட்டியலில் எதிரொலித்தது. 2023 நிதியாண்டில் மட்டும் ஐகியூப் மாடலை 80 ஆயிரத்து 565 பேர் வாங்கியுள்ளனர். இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் டாப் 20 உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

    மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் விலை ரூ. 98 ஆயிரத்து 564 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 08 ஆயிரத்து 690 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 140 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் டாப் எண்ட் ஐகியூப் ST வேரியண்டை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விலை விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    ×