மேச்சேரி அருகே பைக் மோதி மூதாட்டி சாவு

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
மேச்சேரி அருகே பைக் மோதி மூதாட்டி சாவு
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 66).

இவர் கடந்த 14-ந் தேதி மாலை பொதியம்பட்டி - புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com