search icon
என் மலர்tooltip icon
    • மதுக்கடைகள் திறப்பால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
    • புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

    மதுரை

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயண சாமி இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவி லில் சாமி தரிசனம் செய் தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில்ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் ஊழல் அதிரித்தது. இதனை மக்களிடம் எடுத்து கூறிய தால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சிக்கு வந்து உள்ளது.

    கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த பலி துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். மரக்கா ணத்தில் கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்து தான் வந்துள்ளது.

    ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

    தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடு கிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவ காரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜி னாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்து வாரா?.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும்.

    முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடி வாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.

    அ.தி.மு.க.விற்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.

    கள்ளச்சாராயம் என்பது இந்தியாவிலே எங்கும் இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அவலம் உள்ளது.

    கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப் பட்டிருக்கிற அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படி கொடுப்பது முறையான நிர்வாகமா?.

    நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு ஐ.ஜி.யிடம் வழங்கப்பட்டது.
    • வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    மதுரை

    கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழு வதும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி னர்.

    இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஜல்லிக்கட்டு வழக்கு முறி யடிப்பு குழுவினர் மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்

    ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் மற்றும் சாமா னியர்கள். அவர்களால் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள முடியாத பொருளாதார நிலை இருப்பதால் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    • பஸ் நிறுத்தம் அருகே மயங்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர் முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (49). இவர் தெற்குவாசல் பஸ் நிறுத்தம் அருகே காத்திருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து உறவினர் சாகுல் ஹமீது கொடுத்த புகாரின் பேரில் தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள ஐகோர்ட்டு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்தவர் பாரதிராஜா (41). இவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மனைவி ஹேம சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • அரிவாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் ரோந்து பணியில் ஈடுபட்டார். பத்திர காளியம்மன் கோவில் தெரு தண்டவாளம் அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை மடக்கினார்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் கீரைத்துரை வேத பிள்ளை தெருவை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாளிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் யாரை கொலை செய்ய பதுங்கி இருந்தார்கள்? எதற்காக கொலை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை புதூர் கணேசபுரம் தெருவை சேர்ந்த சீனி முத்தையா மகன் ராஜு (54). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீரமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ராஜுவிடம் கூறியுள்ளார்.

    இதற்காக 2014 முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.65லட்சம் பெற்றார். வாக்குறுதி அளித்தபடி ராஜுவுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது தராமல் ஏமாற்றினார்.

    இது குறித்து ராஜு புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மேல பொன்ன கரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) என தெரியவந்தது. இதை யடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்த னர்.

    அண்ணா பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக நின்று கொண்டி ருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 10-வது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 200-ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு நள்ளிரவு வரும் பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    மாட்டுத்தாவணி, பெரி யார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் சமூக விரோதிகள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்ற னர். இதனால் வெளியூர்க ளில் இருந்து நள்ளிரவு ஊர் திரும்புபவர்கள் பீதியுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    • மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மதுரை

    மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

    அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பைக் ஓட்டி சாகசம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை சொக்கிகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் சிறுவன் உள்பட 3 வாலிபர்கள் பைக் ஓட்டி சாகசம் செய்து கொண்டிருந்தனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் இதுகுறித்து பொதுமக்கள், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட காமராஜ் நகர் ஷரீப் மகன் நியாஸ் (வயது25), செல்லூர் சக்தி மாரியம்மன் கோவில் தெரு, குருநாதன் மகன் மீனாட்சி சுந்தரம் (21), மற்றும் 17 வயது சிறுவன்ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் ஓட்டிச்சென்ற 2 பைக்குகளையும், அவர்கள் வைத்திருந்த 3 செல்போன்க ளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் முகமது அப்துல்லா (வயது18). இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது கரும்பாலை பி.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரவுடி அருண்பாண்டி, வினோத்குமார், பால சக்தி, தமிழ் இனியன், ராமச்சந்திரன், ஹரிவிக்னேஷ், கார்த்தி என்ற எலி கார்த்தி, சோனைமுத்து, கே.கே. நகர் சித்திரவேல் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர்.
    • அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    ×