search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திமுனை"

    • முதியவர் உள்பட 2 பேரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைப்பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் 17 வயதுடைய இளைஞர்கள் தான் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    மதுரை ஆண்டாள் கொட்டாரம் கபீர் நகரை சேர்ந்தவர் முத்து கருப்பன் (வயது60). இவர் சம்பவத்தன்று அண்ணா நகரில் உள்ள ஆரம்ப சுகாதாரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்து 250-ஐ பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை வடபழனியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் பவித்ரன், திருநகர் 3-வது நிறுத்தம் நல்லான் மகன் ராஜேஷ் குமார் (37), திருப்பாச்சேத்தி ஆவாரங்காடு முருகன் என்ற குட்டை முருகன் (40), திண்டுக்கல் பேகம்பூர் சக்திவேல் மகன் சுபாஷ் (23) ஆகிய 4 பேர் முதியவரிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகன் செல்வம்(30). இவர் சம்பவத்தன்று நாகுபிள்ளை தோப்பு ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட்டதுமானாமதுரை ஆவாரங்காடு சிவசிங்கம் மகன் லட்சுமணன் (32),மானாமதுரை ஆவாரங்காடு சரவணகுமார் மகன் அகிலன் (22), சிவகங்கை திருப்புவனம் நந்தகோபால் மகன் கண்ணன் என்ற கேடி கண்ணன் (20), சிவகங்கை கலியநத்தூர் முருகன் மகன் நிதிஷ்குமார் என தெரியவந்தது.

    இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய கோழிகுமார், தனுஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • முகமூடி அணிந்த மர்மநபர் கைவரிசை
    • சுமார் 3 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    நாகர்கோவில் :

    பளுகல் அருகே மேல்பாலையை அடுத்த மாங்காலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி. இவர் வெளிநாட்டில் உள்ளார்.

    இவரது மனைவி அஜிதா (வயது 42). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்று இரவு அஜிதாவும், அவரது மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 2 பவுன் நகையை திருடினார். பின்னர் படுக்கையறைக்குள் புகுந்த நபர் அஜிதா மற்றும் அவரது மகளை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்த நகையை பறித்தார்.

    சுமார் 3 பவுன் நகைகளை கொள்ளை அடித்து விட்டு மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அனிதா பளுகல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாக கூறினார். இதையடுத்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தில் கேரளாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கத்திமுனையில் 2 பேரிடம் வழிப்பறி; 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் சிலவத்தூர் குமரன் திருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்வகுமார் (வயது 34). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் செல்வகுமார் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியது.

    இந்த சம்பவம் குறித்து செல்வகுமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது மேல பொன்ன கரம் கொம்பமுத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் கார்த்திக் (20), அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் பாண்டி (23), முத்துக்குமார் மகன் கோபிநாதன் (21), பாண்டி மகன் மணிகண்டன் (23) என தெரியவந்தது. இதை யடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கத்தியை பறிமுதல் செய்த னர்.

    அண்ணா பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (50). இவர் அந்த பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக நின்று கொண்டி ருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 10-வது தெருவை சேர்ந்த கரிகாலன் மகன் பாஸ்கரன் (30) என்பவர் கத்தி முனையில் மிரட்டி ரூ. 200-ஐ வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து கண்ணன் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரையில் இருந்து வெளியூர் செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து மதுரைக்கு நள்ளிரவு வரும் பயணிகளை மிரட்டி நகை, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    மாட்டுத்தாவணி, பெரி யார், ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் சமூக விரோதிகள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தனியாக வருபவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்ற னர். இதனால் வெளியூர்க ளில் இருந்து நள்ளிரவு ஊர் திரும்புபவர்கள் பீதியுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் கூடுதல் ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதுரையில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை கைது செய்தனர்.
    • வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ் (வயது 23). இவர் நேற்று நேதாஜி ரோட்டில் நடந்து சென்றார். அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அண்ணா மெயின் வீதி, காளியப்பன் மகன் பைலட் கார்த்திக் (24), பழங்காநத்தம் டிவிஎஸ் நகர், முருகன் கோவில் தெரு, ரவி மகன் பூச்சி பாண்டி என்ற முத்துப்பாண்டி (22) என்பது தெரியவந்தது.

    அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊத்தை கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

    ×