செல்போன் பறித்த 2 பேர் கைது

மதுரையில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேரை கைது செய்தனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ஆவார்.
செல்போன் பறித்த 2 பேர் கைது
Published on

மதுரை

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ் (வயது 23). இவர் நேற்று நேதாஜி ரோட்டில் நடந்து சென்றார். அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சதீஷிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அண்ணா மெயின் வீதி, காளியப்பன் மகன் பைலட் கார்த்திக் (24), பழங்காநத்தம் டிவிஎஸ் நகர், முருகன் கோவில் தெரு, ரவி மகன் பூச்சி பாண்டி என்ற முத்துப்பாண்டி (22) என்பது தெரியவந்தது.

அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஊத்தை கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com