மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது

மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மிளகாய் பொடி-ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கைது
Published on: 

மதுரை

மதுரை அண்ணாநகர் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் ரிங்ரோடு அம்மா திடல் பகுதியில் சென்றபோது சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள், 2 கயிறுகள், 4 கைக்குட்டைகள் மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டு கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் கரும்பாலை நடுத்தெரு கிருஷ்ணன் மகன் கார்த்திக் என்ற லெப்ட் கார்த்திக் (வயது27), திருப்பதி (25), கரும்பாலை நாகராஜ் மகன் விக்னேஷ் என்ற விக்கி (26), அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் கனிஷ்கர் (26), விஸ்வநாதன் மகன் சரவணன் (26), திருப்பாலை ரெட்ரோஸ் தெருவை சேர்ந்த சின்னத்தம்பி மகன் அஜித்குமார் (33) என்று தெரியவந்தது.

அவர்கள் குற்ற செயல்க ளில் ஈடுபட பதுங்கியி ருந்தது தெரியவந்ததால் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com