search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளசாராயம்"

    • கள்ளசாராயம் விற்றவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கலாமா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. சார்பில் அன்ன தானம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும்.

    முதல் முதலாக பச்சை தமிழராக ஒரு முதலமைச்சர் வாடி வாசலுக்கு நேரடியாக வந்து துள்ளி வருகிற காளையை அங்கே வணங்கி பச்சைக்கொடி அசைத்து அதை தொடங்கி வைத்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு உண்டு.

    அ.தி.மு.க.விற்கு 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கிற அந்த பணியையும், ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மதுரையிலே உலகமே திரும்பிப் பார்க்கிற அந்த பொன்விழா வெற்றி மாநாட்டை நடத்துகிற அந்த வரலாற்று பெருமை எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கிறது.

    கள்ளச்சாராயம் என்பது இந்தியாவிலே எங்கும் இல்லாத நிலையில் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அவலம் உள்ளது.

    கள்ளசாரயம் விற்பனை செய்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப் பட்டிருக்கிற அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படி கொடுப்பது முறையான நிர்வாகமா?.

    நிர்வாகக் குளறுபடியின் மொத்த அடையாளங்களாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
    • விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த மூன்று நாட்களில் (14, 15, 16.05.2023) ஆகிய 3 நாட்களில் மட்டும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் நடத்திய தீவிர மதுவிலக்கு வேட்டையில் 96 கள்ள சாராய வழக்குகள் பதியப்பட்டும், அதில் 92 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 8,31,950 மதிப்பு உடைய விஷசாராயத்தை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581)மூலம் கள்ளச்சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனையை குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.
    • அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள வாலிப்பட்டி கிராம த்தைச் சேர்ந்தவர் தங்கப்பொ ண்ணு (வயது 60). இவர் அரசு அனுமதி இன்றி நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த தங்க பொண்ணை கைது செய்தனர். பின்னர் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
    • மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் பாரதி நகர் பகுதியில் சாராயம் விற்பதாக திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் மாநகர மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார் செல்வராஜ் மற்றும் போலீசார் பாரதி நகர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஒரு மறைவான இடத்தில் வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சேலத்தைச் சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்தது.

    போலீசார் அவனை கைது செய்து அவனிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது எங்கு காய்ச்சியது எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×