search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின்"

    • இந்தி தினம் கொண்டாடுவதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பும் கண்டனமும் வலுத்துவருகிறது.
    • கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது" என குமாரசாமி கூறி உள்ளார்

    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி திவாஸ் என்ற பெயரில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்த தினத்தைக் கொண்டாட இந்தி பேசாத மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தி தினத்தையொட்டி வடமாநில தலைவர்கள் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என பேசுகிறார்கள். இதற்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்பும் கண்டனமும் வலுத்துவருகிறது.

    இந்த ஆண்டு இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி உலக அரங்கில் இந்தியாவுக்கு சிறப்பு மரியாதையைக் கொண்டு வந்துள்ளது என்று இந்தி மொழி தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அமித் ஷா

    அமித் ஷா

    இந்நிலையில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் செம்டம்பர் 14ம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நமது கலாச்சாரம், ஆன்மாவை புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்கவேண்டும். நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதி ஏற்கவேண்டும், என கூறியிருக்கிறார்.

    ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாட்டிற்கு நேர் எதிரானது.

    இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்படவேண்டும் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவாக இருக்கிறது. அப்போதுதான் உண்மையான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள முடியும்.

    சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத்தள்ளி, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும்.

    இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா, அதனை ஹிந்தியா என்ற பெயரில் பிளவுபடுத்தும் முயற்சிகள் வேண்டாம். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக்கி, இந்தி தினத்திற்குப் பதில் இந்திய மொழிகள் நாள் என கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்தவேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறி உள்ளார்.

    கர்நாடகாவில் இந்தி தினத்தைக் கொண்டாட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதச்சார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர் குமாரசாமி, முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தி தினத்தை கொண்டாட கூடாது என கூறி உள்ளார். "கர்நாடகாவில் கன்னட மொழியை கொண்டாடுவதை தவிர்த்து, இந்தி மொழி தினம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது" எனக் குமாரசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
    • இவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.


    பாரதிராஜா

    இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் பாரதிராஜா அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை திரைப்பிரபலங்கள் பலர் நேரில் சென்று பார்த்தனர்.


    இதையடுத்து பாரதிராஜா நேற்று (09-09-2022) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து நேரில் சென்று நலம் விசாரித்தனர். அண்மையில் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்.
    • ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்!

    2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி!

    ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.


    பொன்னியின் செல்வன்

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "பொன்னியின் செல்வன் -1" திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும்  அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.


    முதலமைச்சர் ஸ்டாலின்

    இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார்.
    • அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பின் மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.

    இந்நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. #MKAzhagiri
    மதுரை:

    திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். ஆனால், கருணாநிதி இருக்கும் போதே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். 

    இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். 

    காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளை மறுநாளும் சந்தித்து முக அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். 
    பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். #MKStalin #DMK
    சென்னை:

    பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து சத்யா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பிலும் வெளியிட்டுள்ளார்.

    இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி தி.மு.க.முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:-

    தனிநபரை விட கழகமே உயர்ந்தது என்ற உணர்வின்றி செயல்படுபவர்களையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பெண்களிடம் வரம்பு மீறி ரவுடித்தனமான செயல்களில் ஈடுபடுவோர் என - யாராக இருந்தாலும் கழக விதிகளின்படி கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன்!

    கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில், பெரம்பலூரில் பெண்மணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். 

    தனிப்பட்ட பிரச்சினைகள் - விருப்பு வெறுப்புகளைக் கொண்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபடுபவர்களை தி.மு.கழகம் அனுமதிக்காது!
    திமுக ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் உதயநிதி படமும் இருக்க, தொண்டர் ஒருவர் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். #DMK #UdhayStalin
    சென்னை:

    திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. தஞ்சாவூரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் கொண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

    அதைப் பார்த்த திமுக தொண்டர் ஒருவர், ‘மிஸ்டர் உதயநிதி, ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கு தெரியுமா? உங்களுக்குத் தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடையில, உங்கள் போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?’ என்று ஷாமுராய் என்பவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்குப் பதிலளித்துள்ள உதயநிதி, ‘தவறு… மீண்டும் நடக்காது’ என உறுதியளித்துள்ளார். 


    தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். #MKStalin #DMK #Sophia
    சென்னை:

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த மாணவி சோபியாவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

    நேற்று இது தொடர்பாக கருத்து பதிவிட்ட திமுக தலைவர், “ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! ‘பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!’ ” என ட்வீட் செய்திருந்தார்.



    இந்நிலையில், இன்றும் இது தொடர்பாக அவர் இட்டுள்ள பதிவில், “கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில்,தங்களின் பினாமி அதிமுக அரசு தமிழகத்தில் இருப்பதால் எவ்வித அராஜகங்களிலும் ஈடுபடலாம் என்ற தைரியத்தில் பாஜக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. உடனடியாக, மாணவி சோபியா மீதான வழக்கை திரும்பப் பெற்று,அவர் ஆராய்ச்சி படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
    திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வோம் என மு.க அழகிரி மதுரையில் பேட்டியளித்துள்ளார். #DMK #MKStalin #MKAlagiri
    மதுரை:

    தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்துள்ளார்.  அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தது பற்றி மதுரையில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதிலளித்த அவர், ஸ்டாலின் தலைவராவதற்கு என்னை முன்மொழிய சொல்கிறீர்களா? என பதில் கூறினார்.

    தொடர்ந்து மு.க. அழகிரி கூறும்பொழுது, இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்வோம். போட்டியிடுவோம் என்று கூறினார்.
    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் விஜயகாந்த் உறுதியாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார். #OPS #ADMK #VijayaKanth #MKStalin
    கோவை:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுகவில் மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணிக்கு செல்ல வேண்டும் என்பது உங்களது யூகம். அதற்கு பதில் கூற முடியாது.

    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து விஜயகாந்த் பின்வாங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், முதல்வருடன் கலந்து ஆலோசித்து செல்வோம் 

    என ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 
    ×